பாஜகவில் 200 கேஸ் ரவுடி நெடுங்குன்றம் சூர்யா- எனக்கு தெரியாதே..ஏன்? அண்ணாமலை 'செம்ம' 'தத்துவ' பதில்!
கோவை: தமிழ்நாடு பாஜகவில் 8 கொலை வழக்கு உட்பட 200 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நெடுங்குன்றம் சூர்யா இணைந்து பட்டியல் அணி மாநில செயலாளராக பதவி பெற்றது மாநில தலைவரான தமக்கு தெரியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக தெரிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை புறநகரில் நெடுங்குன்றம் சூர்யா என்ற பெயரை கேட்டாலே பொதுமக்கள் குலைநடுங்குவர்.. 8 கொலை வழக்குகள் உட்பட 200 வழக்குகளில் சிக்கியவர் நெடுங்குன்றம் சூர்யா.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை தாம்பரம் அருகே பாஜகவில் சேருவதற்காக பட்டா கத்தி, ரவுடிகள் சகிதமாக வந்த போது போலீசார் சுற்றி வளைக்க தப்பி ஓடியவர் நெடுங்குன்றம் சூர்யா. இவரது மனைவி, நெடுங்குன்றம் ஊராட்சி துணைத் தலைவர். சூர்யா மனைவி ஊராட்சி துணைத் தலைவராக பதவியேற்க மேடையில் அமர்ந்திருந்த போது 'கஞ்சா' வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
பாஜகவில் 200 கேஸ் ரவுடி சூர்யா: இந்நிலையில் கடந்த வாரம் தாம் பாஜகவில் இணைந்துவிட்டதாகவும் பாஜகவின் பட்டியல் அணி மாநில செயலாளர் பதவி தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் திடீரென ரவுடி சூர்யா அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜகவில் சேர்ந்தது தெரியாது: இது தொடர்பாக கோவை அன்னூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அண்ணாமலை அளித்த பதில்: அப்படியாங்கண்ணா, எனக்கு தெரியாது. நான் பாதயாத்திரையில் போய்கிட்டு இருக்கேன்.
குறியீட்டுடன் கட்சியில் சேர்ப்பு: அண்ணே: கட்சியில் இணையறாங்க,, கட்சியில் சேருறாங்க. ஒரே ஒரு குறியீடு என்னான்னா என் முன்னாடி இணையலை. எனக்கு தெரியாது. யாரையும் கட்சியில் இணைக்க சொல்றதும் இல்லை. சில குறியீடுகள் வைத்திருக்கிறோம். மிக முக்கிய குறியீடு என்னான்னா. அரசியலில் வந்த புதிதில் நானும் இந்த சமுதாயத்தை வெள்ளை கறுப்பாக பார்த்தேன். நானும் போலீஸ்காரனாக இருந்தேன். அதனால் நல்லவங்க, கெட்டவங்க என பார்த்தேன்.
தத்துவ விளக்கம் தெரியுமா?: அரசியலில் வந்த பிறகு 3 ஆண்டுகளில், சிலர் வந்து அரசியலை ஒரு பவர் கேமாக பயன்படுத்துறாங்க.. சிலர் அரசியல் மூலம் ஆதாயமடைகின்றனர். இன்னும் சில பேர் தவறான மனிதர்களாக இருந்தாலும் கூட தன்னை திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக பார்க்கிறாங்க.. இன்னைக்கு யாரைப் பற்றியும் நான் கருத்து சொல்லவில்லை. கட்சியில் சேர வந்திருப்பவர்கள் தமக்கு தாமே சில கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு வந்துள்ளனர். இனிமேல் சில வேலைகளை செய்ய மாட்டேன். இனிமேல் நல்லவனாக இருப்பேன் என. இதற்கு பாஜக ஒரு வாய்ப்பு கொடுத்திருப்பதாக பார்க்கிறேன்.
பாஜகவில் அதிகாரப் பரவல் சாரே.. : பாஜகவை டீ சென்ட்ரலைஸாக வைக்க பார்க்கிறோம். கட்சியில் எல்லாத்தையும் சென்ட்ரலைஸாக நானே வெச்சுக்காம கட்சியில் சேருகிற ஒவ்வொருத்தரையும் என்னை கேட்டுட்டு சேருங்கன்னு சொல்றதைவிட கட்சியில் சேர்க்கும் போது கேஸ் பாருங்கன்னு சொல்றேன். கட்சியில் நல்லவன்னு சொல்லி சேருகிறவர்கள் நல்லவங்களாகவே இருக்கப் போறதும் இல்லை. மே பீ.. நீங்க சொன்ன நபருக்கும் கூட அந்த அணியின் தலைவர் 2 மாதம் ,3 மாதம் கட்டுப்பாடு விதித்திருப்பார் என நம்புகிறேன். நான் இங்க் இருந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன? -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்!












Click it and Unblock the Notifications