வெளியேறிய ஜெகதீப் தன்கர்.. துணை குடியரசு தலைவராக ஒரு தமிழரா? பாஜக அண்ணாமலை கொடுத்த ரியாக்சன்!
கோவை: துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் எனவும், எதிர்க்கட்சிகள் பல புரளியை கிளப்புகிறார்கள் என கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும், துணை குடியரசு தலைவர் பதவிக்கு தமிழ்நாட்டில் இருந்து யார் வந்தாலும் மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," துணை ஜனாதிபதியாக நல்லவர் வந்தால் மகிழ்ச்சி. ஜகதீப் தன்கர் மிகச் சிறந்த மனிதர். அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் வெளியில் வந்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் பல புரளியை கிளப்புகிறார்கள். ஆனால் அவர் ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கிறார். அவர் உடல்நிலை கருத்தில் கொண்டு வெளியே வந்திருக்கிறார்கள். அந்த பதவிக்கு தமிழ்நாட்டில் இருந்து யார் வந்தாலும் மகிழ்ச்சி. அதிலும் குறிப்பாக தமிழர் வந்தால் மகிழ்ச்சி.

அதிமுக பிரச்சனை பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. கூட்டணியில் இருந்தாலும் நான் அது குறித்து கருத்து சொன்னால் தவறாக போய்விடும். 20 இடங்கள் ஜெயிக்க கூடிய கட்சி எதற்காக சர்வீஸ் செய்கிறார்கள். மக்கள் மனதில் கோபம் இருக்கிறது. மக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற கோபம் இருக்கிறது. இதற்கு முன்பு திமுக சந்தித்த தோல்வி தெரியும். ஒரே ஒருவர் ஜெயித்தார். இரண்டு பேர் ஜெயித்தார்கள். அது யார் என்று தெரியும். அது போன்ற மோசமான தோல்வியை திமுக முன்னாள் பார்த்து இருக்கிறார்கள். அதை நோக்கித்தான் இந்த தேர்தல் போகிறது.
முதலமைச்சர் பற்றி காட்டமாக பேச விரும்பவில்லை. அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும். என்னதான் சர்வே எடுத்தாலும் திமுக தோல்வி உறுதி. சூப்பர் ஸ்டார் சகோதரர், கருப்பா, சிவப்பா என்ற கூட தெரியாது. அவருடைய கருத்து. அது நான் ஏற்பது ஏற்காதது தவறாக போய்விடும். பிற தலைவர்கள் இருக்கிறார்கள். விஜய் ஒரு கட்சி ஆரம்பித்து இருக்கிறார். கடுமையாக பணி செய்ய வேண்டும். களத்திற்கு வந்தால் தான் வெற்றி தோல்வி. இது அவரது கையில் இருக்கிறது.
திமுக அகற்றப்பட வேண்டும். நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் எங்களது கூட்டணி ஜெயிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம் கடுமையாக உழைக்கட்டும் மக்களுக்கு என்ன செய்வோம் என்று வாக்குறுதியை வைக்கட்டும். அண்ணாமலைக்கு இதை விட பெரிய பொறுப்பு என்னவாக இருக்கும். புதிய தலைவர் வரணும். அவர்கள் முடிவு செய்வார்கள். மாநில தலைவராக இருந்த பணியை இப்போதும் செய்கிறேன்.
திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியே போகும் காலமும் சூழலும் வரும்பொழுது, தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையான வடிவத்தில் இருக்கும். திமுக ஆட்சிக்கு முன்பு கர்மவீரர் காமராஜர் ஐயா ஆட்சியின் போதும் தனி நபர் வருமானம் எப்படி இருந்தது என்பதை குறித்து எல்லாம் இவர்கள் பேச மாட்டார்கள். அப்போதெல்லாம் தமிழகம் முன்னாடி தான் இருந்தது. நீர்ப்பாசனத்தில் முன்னோடியாக தான் இருந்தது. புரட்சித் தலைவர் ஆட்சிக்காலத்தில் தமிழகம் முன்னாடி தான் இருந்தது. இவர்கள் எப்படி வாயில் வடை சுடுகிறார்கள் என்றால் திமுக தோன்றிய பிறகுதான் நீங்களும் நானும் சட்டை போட்ட நாகரீகமாக இருப்பது போன்ற கதை பேசுகிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் தொழில்துறை கீழே போக ஆரம்பித்துவிட்டது. உத்தர பிரதேசம் கடந்தாண்டு அதிகப்படியான ஸ்டார்ட் அப் பதிவு செய்திருக்கிறார்கள். ஹரியானா அதிகம். கர்நாடகா தமிழகம் இடையே இருந்தான இடைவெளி குறைந்தது உத்தர பிரதேசம் நம்மை நெருங்கி வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications