வெளியூர் ஆட்களை அழைத்து கலவரம் பண்றாங்க.. அண்ணாமலை ரவுடியிசம் கோவையில் எடுபடாது! திமுக கணபதி அட்டாக்
கோயம்புத்தூர்: கோவை அமைதி விரும்பும் நகரம், இங்கு ரவுடிசம் எடுபடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழக அரசியல் மாற்றத்திற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் கோவை இருக்க வேண்டும். திமுகவினர் மொத்த சொத்தையும் எடுத்து வந்தாலும் கோவை மக்கள் நேர்மையின் பக்கம் நிற்பார்கள்.

அடுத்த 7 நாட்களுக்கு நம் தொலைபேசிக்கு அழைப்பு வந்தால் அலைபேசியை எடுத்து ஹலோ சொல்வதற்கு பதிலாக தாமரை வணக்கம் எனச் சொல்லுங்கள். ஹலோ என ஆங்கில வார்த்தை வேண்டாம். தொலைபேசியில் பேசும்போது தாமரை வணக்கம் எனச் சொல்லும்போது, தாமரை சின்னம் அனைவருக்கும் போய்ச் சேரும். கோவையில் தாமரையை மலர வைப்போம்
11 மணி தாண்டி பிரச்சாரம்; இதையடுத்து ஆவாரம் பாளையம்ஸ் சென்ற அண்ணாமலை அங்கே நேரம் கடந்து பிரச்சாரம் செய்துள்ளார். கோவை ஆவாரம்பாளையத்தில் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். அண்ணாமலை இப்படி நேரம் கடந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை அடித்து, உதைத்து பாஜகவினர் தாக்கியதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.
ஆவாரம்பாளையம் 28வது வார்டு பகுதியில் இரவு 10.40 மணி அளவில் பிரசாரம் செய்த் நிலையில் அண்ணாமலையை திமுகவினர் எதிர்த்து உள்ளனர். இதையடுத்து அண்ணாமலைக்கு பின் மீது வாகனங்களில் வந்த பாஜகவினர் திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கே கடுமையான மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை தாக்கிய பாஜகவினர் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திமுக கண்டனம்: இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, பிரசாரம் செய்கின்றோம் என்ற பெயரில் ஊடுருவ வைத்திருக்கிறார்கள். கோவையில் எந்த நேரத்திலும் கலவரத்தை உண்டாக்கிவிடுவார்களோ என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். இதற்கான ஆதாரம் இருக்கின்றது.
பாஜகவினரின் விதிமீறல்கள் குறித்த புகார்களை தேர்தல் ஆணையம் கவனிக்கிறதா என்று சந்தேகம் எழுந்திருக்கின்றன. தோல்வி பயத்தினால் வேறு ஏதேனும் இடையூறு செய்ய திட்டமிட்டுள்ளார்களா என்று கேள்வி எழுந்திருக்கிறது. கோவை அமைதி விரும்பும் நகரம். சத்தமாக பேசினால்கூட மக்களுக்கு பிடிக்காது. ரவுடிசம் இங்கு எடுபடாது, என்று கூறியுள்ளார்.
மும்முனை போட்டி: கோவை லோக்சபா தேர்தல் களம் தற்போது சூடு பிடித்து உள்ளது. கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார். இதனால் அங்கே கடுமையான மும்முனை போட்டி நிலவி வருகிறது.
-
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications