Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“யார் அந்த 18 பேர்? அமாவாசை காலத்து டெக்னிக்குடன் கோவை வந்துள்ளார் செந்தில் பாலாஜி”- அண்ணாமலை தாக்கு

Subscribe to Oneindia Tamil

கோவை: "அமாவாசை காலத்து டெக்னிக்குடன் கோவை தெற்கு தொகுதிக்கு வந்துள்ளார் செந்தில் பாலாஜி. கோவை தெற்கு தொகுதியில் கரூரை சேர்ந்த 18 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். கரூரை சேர்ந்தவர்களுக்கு கோவையில் என்ன வேலை?" என விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அண்ணாமலை போட்டியிட விரும்பிய தொகுதி கிடைக்காததால் அவர் தான் போட்டியிடவில்லை என தலைமைக்கு தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

Annamalai Slams Senthil Balaji

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையை துவங்கியுள்ளார் அண்ணாமலை. காலையில் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் மனு தாக்கல் செய்யும் போது உடன் இருந்தார். இதையடுத்து அவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெவ்வேறு ஊர்களில் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு எதிராகப் பேசிய சிலவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

அண்ணாமலை பேசுகையில், "கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடர்பாக திமுக ஆதரவு ஊடகங்களில் தவறான தகவல் கொடுத்து வருகின்றனர். கேந்திரிய வித்யா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. 40 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

1976 இல் FCRA வை கொண்டு வந்தது இந்திரா காந்திதான். வெளியில் இருந்து பணத்தை கொடுத்து உள்நாட்டில் கலகத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக முன்னாள் பிரதமர் இந்திரா, எப்சிஆர்ஏ சட்டத்தை கொண்டு வந்தார். எப் சி ஆர் ஏ சரியான இடைவெளியில் திருத்தம் செய்யப்பட்டு வந்துள்ளது. FCRA சட்டம் கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவது உறுதி. கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்ட வரைவு அறிக்கை சரி செய்து அனுப்பி வைக்கப்பட்டதா? மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையின் குறைபாடுகளை திமுக அரசு சரி செய்து அனுப்பவில்லை. கோவை மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவது உறுதி என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் கரூரைச் சேர்ந்த 18 பேர் சுயேட்சையாக போட்டியிடுவது எதற்காக? கரூரை சேர்ந்தவர்களுக்கு கோவையில் என்ன வேலை? கரூர் முழுக்க தங்கள் வசம் வந்துவிட்டதால் கோவையை சுற்றி வளைக்க செந்தில் பாலாஜியை அனுப்பியுள்ளனர் திமுகவினர். கோவை தெற்கு தொகுதியில் கரூரை சேர்ந்தவர்களுக்கு என்ன வேலை?

கோவையில் எந்தளவு அநியாயம் நடக்கிறது என்றால், செந்தில்பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில் 18 சுயேச்சையாக போட்டியிடுகின்றனர் என்றால், அவர்களுக்கு பாஸ் கிடைக்கும். பூத் ஏஜென்ட் நியமித்து கொள்ளலாம். இலவச பொருட்கள் கொடுக்கலாம். இந்த அமாவாசை காலத்து டெக்னிக்கை, 2026 சட்டசபை தேர்தலில் கரூரை சார்ந்திருக்கும் செந்தில் பாலாஜி, அவரது அடியாட்களை, கரூர் கட்சிக்காரர்களை கோவை தெற்கில் இறக்கி விட்டுள்ளார்.

நியாயப்படி தேர்தல் கமிஷன் அடையாள அட்டை கொடுக்கும். இவர்கள் கோவையில் களமிறங்கி இலவசத்தை கொடுத்து அமைதியை கெடுக்க முயற்சி நடக்கிறது. இலவசத்தை கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க உள்ளோம். அமாவாசை காலத்து டெக்னிக்குடன் கோவை தெற்கிற்கு வந்துள்ளார் செந்தில் பாலாஜி" என விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

மேலும் பேசிய அவர், "இன்று முதல் தேர்தல் முடியும் வரை பாஜக சார்பில் தினமும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பேன். முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி நிறைய பேசுகின்றனர். சரியான தரவுகள் இல்லாமல் மக்கள் மன்றத்தில் பேசுகின்றனர். தினமும் மக்கள் மன்றத்தில் உண்மை சொல்ல வேண்டும். மக்கள் யோசித்து ஓட்டுப் போட வேண்டும் என்ற முயற்சி.

அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 210க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எல்லா தொகுதிகளிலும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறேன். நான் தேர்தலில் போட்டியிடாதது வருத்தம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+