பன்மாலையுடன் செல்வபெருந்தகை.. நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கோவையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

கோவை: ஜிஎஸ்டி பற்றி கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்ததாக குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் இன்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பன் மாலை அணிந்து செல்வபெருந்தகை பங்கேற்று நிர்மலா சீதாராமனை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கோவை கொடிசியாவில் ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் முரண்பாடுகளை குறிப்பிட்டு அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசினார்.

nirmala sitharaman coimbatore congress

அப்போது அவர் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான ஜிஎஸ்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. இது பிரச்சனையாக உள்ளது. அனைத்து பொருட்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதுதொடர்பாக அவர், ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ (மறைமுகமாக வானதி சீனிவாசன்) எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க. பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள்'' என கூறினார்.

இந்த வீடியோ இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. அதன்பிறகு நேற்று முன்தினம் மாலையில் இன்னொரு வீடியோ வெளியானது. நிர்மலா சீதாராமன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுடன் அமர்ந்து இருக்க அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் அவர்களை சந்தித்தார். அதன்பிறகு நிர்மலா சீதாராமனிடம் அவர், ‛‛நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்" என எழுந்து கைக்கூப்பி மன்னிப்பு கோரியிருந்தார். இந்த வீடியோ வெளியானது. இது சர்ச்சையானது. ஜிஎஸ்டியில் உள்ள குறையை கூறிய சீனிவாசனை பாஜகவினர் மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்டு அவமானப்படுத்தி உள்ளதாக காங்கிரஸ், திமுகவினர் குற்றம்சாட்டினர். ராகுல் காந்தி முதல் கனிமொழி எம்பி வரை இந்த சம்பவத்தை விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமனை கண்டித்து இன்று (14.9.2024) மாலை 3.00 மணியளவில் கோவை ஆர்எஸ்புரம் காந்தி பூங்கா ரவுண்டானாவில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஎம்சி மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பன் மாலை அணிந்து வந்து நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்தார். இதில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய செல்வபெருந்தகை, அன்னபூர்ணா உரிமையாளரை மன்னிப்பு கோர வைத்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+