கோவை பெண்களே தொழிற்பயிற்சி பெற சூப்பர் சான்ஸ்.. ஆட்சியரின் அசத்தல் அறிவிப்பு
கோவை: கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (Spot Admission) நாளை (ஜூன் 19) நடைபெறவுள்ளது. 8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மாதம்தோறும் உதவித் தொகையும் வழங்கப்படவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (ஜூன் 19) நடைபெறவுள்ளது. SPOT ADMISSION-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில் பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு, 10 ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். நேரில் வருகை புரிவோருக்கு இந்நிலைய உதவிமையம் மூலம் விண்ணப்பித்திட வசதி செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு உச்சவயது வரம்பு ஏதும் இல்லை மற்றும் சிறப்பு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இத்தொழிற் பயிற்சி நிலையத்தில் ஓராண்டு பயிற்சியில் Computer Operator & Programming Assistant (COPA), Desktop Publishing Operator (DTPO), IoT Technician (Smart Health Care,) Sewing Technology தொழிற்பிரிவுகள் உள்ளன.
ஈராண்டு பயிற்சியில் Instrument Mechanic (IM), Electronics Mechanic (EM,) Information Technology (IT), Technician Medical Electronics (TME) தொழிற்பிரிவுகளும், ஆறுமாத பயிற்சியில் Smart Phone Technician Cum App Tester தொழிற்பிரிவும் பயிற்றுவிக்கப்படுகிறது. பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் தேசிய தொழிற் சான்றிதழ் (NCVT) வழங்கப்படும்.
பயிற்சியாளர்கள் அனைவருக்கும் பிரதி மாதம் தலா ரூ.750/-உதவித்தொகை, புதுமைபெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மகளிருக்கு மாதம் ரூ.1000/-மிதிவண்டி, சீருடை, தையற்கூலி. காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள். 30 கிலோமீட்டர் தொலைவு வரை இலவச பஸ்பாஸ் வழங்கப்படுவதுடன், நவீன தொழிற்வளர்ச்சியை அறிந்து கொள்ளும் வகையில் Industrial Visit, Inplant Training, Internship Training வழங்கப்படுறது.
மேலும், பயிற்சி முடிக்கும் தருவாயில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்களுக்கு 94990 55692, 9866128182, 8838158132, 94422 39112 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
-
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications