அரக்கோணம் பாலியல் புகார்.. திமுக பிரமுகருக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி? எடப்பாடி பழனிசாமி கேள்வி
கோவை: அரக்கோணம் பாலியல் புகார் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட திமுக பிரமுகர் தெய்வச்செயலுக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்தது எப்படி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் 3 நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, திமுகவின் மோசமான ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி என்றும் கூறி இருக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள திமுக பிரமுகர் தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி ஒருவர் திருமண மோசடி மற்றும் அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி காவலர்கள், வாக்குமூலம் பெற்றனர்.

தெய்வச்செயல் நீக்கம்
ஆனால் போலீசார் எடுத்த ஸ்டேட்மெண்டில் தனக்கு உடன்பாடு இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண் வீடியோ வெளியிட்டார். இதன்பின் தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை செய்யப் போவதாக அறிவித்தது. தொடர்ந்து திமுகவின் தெய்வச்செயல் அக்கட்சியின் இளைஞரணி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆளுநர் மாளிகை சென்றப் பெண்
அதேபோல் தெய்வச்செயல் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுக் கொண்டது கூடுதல் விவாதத்தையும் ஏற்படுத்தியது. அவரது முன் ஜாமீனுக்கு அரசு தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்க முயற்சித்த போது, அவரை போலீசார் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி பேட்டி
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டு மக்கள், பெண்கள், சிறுமிகள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை. இந்த அரசு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறி விட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.
பொம்மை முதல்வர்
ஒரு பொம்மை முதல்வர் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிற காரணத்தால், சட்டம் - ஒழுங்கு மிக, மிக மோசமான நிலையில் இருக்கிறது. இது தான் நாடறிந்த உண்மை. அதே போல அரக்கோணத்தில் பெண்ணுக்கு அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கூறுகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அந்தப் பெண் கொடுத்த புகாரை அப்போதே எஃப்ஐஆர்-ஆக பதிவு செய்து இருக்க வேண்டும்.
3 நாட்கள் தாமதம் ஏன்?
அந்த பெண் 7ஆம் தேதி புகார் கொடுத்து இருக்கிறார். அதை 10ஆம் தேதி தான் காவல் நிலையத்தில் புகாராக பதிவு செய்கிறார்கள். அந்த புகார் தெய்வச் செயல் என்பவர் மீது கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண பிரிவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அவர் நீதிமன்றத்தை அணுகுகிறார், அவருக்கு உடனே ஜாமீன் கிடைத்துவிட்டது.
புகார் வெளியானது எப்படி?
அதேபோல் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை ஊடகம், பத்திரிகை என அனைத்திலும் வெளியிட்டு இருக்கிறார்கள். காவலர்கள் இந்த புகாரை ஒரு போதும் வெளியிடக் கூடாது. ஆனால் அந்தப் பெண்மணி கொடுத்த புகாரை அப்படியே ஊடகத்திலும் பத்திரிகைகளையும் வெளியிட்டு இருப்பதாக பேட்டியை கொடுத்து இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி
தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை ஆளுநரிடம் தெரிவிப்பதற்காக சென்னை சென்றுள்ளார். அங்கு இருக்கும் காவலருக்கு இது தெரிய வர, ஆளுநரை சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தி, அந்த பெண்மணியையும், அவரின் தாயாரையும் ஆட்டோவில் ஏற்றி வெளியே அனுப்பி விடுகிறார்கள். அந்த பாதிக்கப்பட்ட பெண் எனக்கு ஏற்பட்ட இந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என கூறி இருக்கிறார்.
மோசமான ஆட்சி
எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டு இருப்பதற்கு அரக்கோணமே சாட்சி என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதேபோல கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து உள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை, காவல் துறையே வெளியிடுகிறது. குற்றவாளிகள் இதில் முன் ஜாமீன் பெறுவதற்கு காவல் துறையே உதவி செய்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம்












Click it and Unblock the Notifications