Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக மீண்டும் தகவல் பரவி வருகிறது.

தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரச்சாரம், வாக்குறுதிகள் என அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் ஆளும் கட்சியான திமுக இன்றுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Senthil Balaji

கொங்கு மண்டலத்துக்கு ஸ்கெட்ச்

அதிமுகவின் எஃகு கோட்டையாக திகழ்கிறது கொங்கு மண்டலம். கடந்த காலங்களில் கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளதால் இந்த முறை பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. செந்தில் பாலாஜி மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த தேர்தலில் செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், வரும் தேர்தலில் அவர் தெற்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது.

தெற்குத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து செந்தில் பாலாஜியே மறுத்திருந்தார். இதனால், திமுக வேட்பாளர் பட்டியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திமுகவில் கோவை தெற்குத் தொகுதியைக் குறிவைத்து மீனா ஜெயகுமார், மகேந்திரன், ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். செந்தில் பாலாஜியுடம் கரூரில் தீவிரமாகப் பயணியாற்றி வருகிறார்.

தெற்குத் தொகுதிக்கு குறி

இந்நிலையில், செந்தில் பாலஜியே கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக மீண்டும் தகவல் பரவி வருகிறது. கோவையில் எஸ்பி வேலுமணி, அண்ணாமலை என முக்கிய நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், திமுக சார்பில் வலுவான அதே சமயம் மக்களுக்குப் பரிட்சயமான நபரை களமிறக்க வேண்டும் என்பதால் செந்தில் பாலாஜியை கோவை தெற்கில் போட்டியிட தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்தமுறை கரூரிலும் செந்தில் பாலாஜிக்கு அதிக எதிர்ப்புகள் இருப்பதால் கோவையில் போட்டியிட செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளாராம். அவர் அங்கு போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில், கோவை தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட திமுக வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு செந்தில் பாலாஜியே நேரடியாக குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.

திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

அதில், தனது செல்போன் எண்ணைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுமாறும், எதுவாக இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். தெற்குத் தொகுதி நிலவரம் குறித்தும் அங்குள்ள நிர்வாகிகளிடம் கேட்டு வருகிறார். சிறுபான்மை மக்கள் அதிகளவிலும், மற்ற சமுதாய மக்கள் சமஅளவிலும் இருப்பதால் தெற்குத் தொகுதியில் எளிமையாக வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்குப் போடுகிறாராம். இந்த தகவலால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோவை திமுக நிர்வாகிகள் கூறுகையில், முதலில் செந்தில் பாலாஜி தேர்தல் வரை தான் இங்கிருப்பேன். அதன் பின்னர் இங்கிருந்து வெற்றி பெற்று 2 அமைச்சர்கள் கிடைத்துவிடுவார்கள். பின்னர் கரூர் சென்றுவிடுவேன் என்று கூறிவந்தார். தற்போது கோவை தெற்கில் அவர் போட்டியிடுவதால் இங்குள்ள நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ சீட், அமைச்சர் பதவிக்கான வாய்ப்புகள் பறிபோய்விடும்.

கரூர், கோவையில் வரப்போகும் பாதிப்பு

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவது கோவை, கரூர் இரண்டு இடங்களிலுமே பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் வாக்களித்த செந்தில் பாலாஜி கோவைக்கு சென்றுவிட்டார் என்றும், தேர்தலுக்காக கோவை வந்துள்ள செந்தில் பாலாஜி தேர்தல் முடிந்ததும் மீண்டும் சென்றுவிடுவார் என்கிற வகையில் செந்தில் பாலாஜியை வைத்து எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்வார்கள். இதனால், இரண்டு மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்படும். அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிப்பது தான் கட்சிக்கு நல்லது என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+