கோவையில் இங்கெல்லாம் 3ம் கண்.. தமிழ்நாட்டில் முதல்முறையாக அறிமுகம்.. வாகன ஓட்டிகளே உஷார்
கோவை: தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மாநகரில் தானியங்கி வேக அளவீடு கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 40.கிமீ வேகத்திற்கு மேல் போனால் தானாக கேமராவில் பதிவு செய்து அபராத ரசீதை அனுப்பி வைக்கும்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரம் என்றால் அது கோவை தான். கோவை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோவை பல்வேறு நகரங்களின் சந்திப்பாகவும், கேரளாவின் நுழைவு வாயிலாகவும் உள்ளது.

கோவையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் அதிக அளவு அமைந்து வருவதால், கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. கோவையில் சென்னையைப் போல் ஒவ்வொரு பெரிய சிக்னலும் மேம்பாலங்களும் இல்லை. இதனால் கோவையில் சின்ன சின்ன சிக்னல்களுக்கு மாற்றாக யூடர்ன் அல்லது ரவுண்டானா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன
கோவையில் மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி என்றால் அது அவிநாசி சாலை தான். இதற்கு அடுத்தபடியாக சத்தி ரோடும். பாலக்காடு ரோடும் உள்ளது. மேட்டுப்பாளையம் ரோடும், பொள்ளாச்சி ரோடும், திருச்சி ரோடும் இதற்கு அடுத்தபடியாக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளாகும்.
கோவை மாநகரில் அதிவேகமாக செல்வோரால் விபத்துகள் ஏற்படுகின்றன. அப்படி வேகமாக செல்வோரை கண்டுபிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். கோவையில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றாலும் அபராதம் விதிக்கப்படுகிறது.
கோவை மாநகரில் விபத்து ஏற்படுவதை தடுக்க தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மாநகரில் தானியங்கி வேக அளவீடு கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 40.கிமீ வேகத்திற்கு மேல் போனால் தானாக கேமராவில் பதிவு செய்து அபராத ரசீதை அனுப்பி வைக்கும். அவிநாசி சாலை, பாலக்காடு சாலை, சத்தியமங்கலம் சாலையில் 6 தானியங்கி வேக அளவீடு கருவிகளை பொருத்த மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது.
40 கிலோமீட்டர் வேகத்தை கடக்கும் வாகனங்கள் கேமராவில் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இதேபோன்று திட்டம் சென்னையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக கொண்டுவரப்படவில்லை. சென்னையில் பரிசோதனை அடிப்படையில் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருந்தாலும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீசார் கண்காணிப்பில் தான் மேற்கொள்ளப்படுகிறது. அதேநேரம் இதேபோல் கோவையிலும் அபராத நடைமுறை எப்படி இருக்கும் என்பது திட்டம் அமலுக்கு வந்த பின்னரே தெரியவரும்.
கோவை மக்களே வாகனத்தில் செல்லும் அளவான வேகத்தில் செல்லுங்கள். அதிவேகத்தில் செல்ல வேண்டாம். அபராதம் விதிக்கிறார்கள் என்பதற்காக அல்ல. விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக.. எனவே விபத்து என்பது நம்மை மட்டுமல்ல, சம்பந்தமே இல்லாத இன்னொருவரையும் மோசமாக பாதிக்கும். யாரோ செய்யும் சிறிய அலட்சியம் எத்தனை பேர் உயிரை பறித்துள்ளது என்பது உங்களுக்கே தெரியும். எனவே வாகனத்தில் அசுர வேகத்தில் போக வேண்டாம்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications