வைகோ "கையை" கெட்டியாக பிடித்து கொண்ட எஸ்.பி. வேலுமணி.. ஜெயிலுக்குள்ளே என்ன நடந்தது.. திகைத்த கோவை
வைகோவை கோவை சிறையில் நலம் விசாரித்து பேசினார் எஸ்பி வேலுமணி
கோவை: மிக மிக கவனிக்கத்தக்க சம்பவம் கோவை சிறையில் நடந்துள்ளது.. இதையடுத்து, தமிழக அரசியலில் திடீர் கவனம், கோவையை நோக்கி சற்று நேரம் திரும்பியது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலை, துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வ.உ.சிதம்பரனாரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வைகோ
அதேபோல கோவை மத்தியச் சிறையில் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன... இங்குள்ள சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், செக்குக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்திருந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்களிடம், அவிநாசி சாலைக்கு வஉசி பெயர் வைப்பது குறித்த நீண்ட நாள் கோரிக்கை தொடர்பான கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலினிடம் சொன்னால், நிச்சயம் செய்வார் என்றார் வைகோ..

சுரீர் கோபம்
பிறகு, பிரதமர் மோடி படத்தை அரசு அலுவலங்களில் வைப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு வைகோ, "உயர்ந்த தலைவரை பற்றி பேசும்போது, யாரையோ பற்றி பேசுகிறீர்கள்" என்று காட்டமாக பதில் அளித்தார்... இதையடுத்து சிறை வளாகத்தில் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த செக்கு இருக்கும் இடத்தை நோக்கி சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தார்..

சம்பவம் - 1
வைகோவும், எஸ்.பி.வேலுமணியும் ஒரே நேரத்தில் எதிரெதிர் சந்தித்துக் கொண்டனர்.. இதையடுத்து, வைகோவை தேடிச்சென்று பேசினார் வேலுமணி... மேலும் அங்கு வந்திருந்த மதிமுகவினருக்கும் வேலுமணி வணக்கம் தெரிவித்தார்.. வைகோவும் வேலுமணி கையை பிடித்துக் கொண்டு சிறிது நேரம் பேசினார். இருவரும் அப்போது, பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு கைகுலுக்கிக்கொண்டனர். பிறகு, அங்கிருந்து வைகோ புறப்பட்டு சென்றார்... வைகோவை எஸ்.பி.வேலுமணி திடீரென சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் - 2
எதிர்க்கட்சி கொறடாவும், ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக பொதுச்செயலாளரும் திடீரென சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படித்தான் கடந்த மாதம், மதுரையில் வீரமரணம் அடைந்த லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்த ஓபிஎஸ் வந்திருந்தார்... அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கு ஒரு மரத்தடியில் ஓபிஎஸ் உட்கார்ந்திருந்தார்.. அப்போது இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரனும் வந்தனர்.

மரத்தடியில்..
நடந்து வரும்போதுதான், அங்கே ஓபிஎஸ் மரத்தடியில் உட்கார்ந்திருப்பது தங்கத்துக்கு தெரியவந்தது.. ஆனால், அவருடன் வந்துகொண்டிருந்த கேகேஎஸ்ஆருக்கு தெரியவில்லை.. பிறகு, அவரது கையைப்பிடித்து இழுத்து, ஓபிஎஸ் அங்கிருப்பதாக சொல்லி, அழைத்து சென்றார்.. மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஓபிஎஸ்ஸும் டக்கென எழுந்து நின்றார்.. இரு தரப்பிலுமே பரஸ்பர வணக்கங்களை தெரிவித்து கொண்டனர்... தங்கம் தென்னரசு டக்கென ஓபிஎஸ் கையை பிடித்தபடி சிறிது நேரம் பேசினார்.. இரு தரப்பு கட்சி நிர்வாகிகளுமே இந்த நிகழ்வினை அமைதியாக பார்த்து கொண்டு நின்றனர்...

மரணம்
இந்த நாட்டுக்காக, நம் தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் வீர மரணமானது, அனைத்து விதமான பேதங்களையும் சுக்குநூறாக நொறுக்கிவிட்டு, இணக்கத்தை அனைவரிடமும் இழையோடிவிட்டது நெகிழ்ச்சியை கூட்டி வருகிறது.. அத்துடன் வேறு வேறு கட்சியை சேர்ந்த நேரெதிர் துருவங்களே என்றாலும், அரசியல் நாகரீகம் நம் தமிழகத்தில் என்றுமே தலைநிமிர்ந்து நிற்கிறது என்பதற்கு இவையெல்லாம் ஒரு கூடுதல் உதாரணம் ஆகும்.












Click it and Unblock the Notifications