Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் நண்பனுக்கு வண்டி கொடுத்தவருக்கு வந்த சோதனை.. டிடி ஃபைன் 12000 அபராதம்.. பார்க்கிங் 14000

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக போக்குவரத்து போலீசார் 12000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அத்துடன் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். அப்படி பறிமுதல் செய்த வாகனத்தை கோவையில் வாகன கட்டண பார்க்கிங்கில் பாதுகாப்பிற்காக நிறுத்தி உள்ளனர். கடந்த ஓராண்டுகளாக வண்டியை எடுக்காத வாகன உரிமையாளர், நீதிமன்றத்தில் 12000 அபராதம் கட்டி வாகனத்தை எடுக்க முயன்ற போது ட்விஸ்ட் காத்திருந்தது.

கோவை மாநகரம் பீளேமேட்டைச் சேர்ந்த மாணிக்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 25.10.2023 அன்று ஸ்ப்ளண்டர் வாகனத்தை நண்பர் ஒருவர் வாங்கி கொண்டு சென்றார். வீடு வரை போய் வருவதாக கூறி இரவல் வாங்கி சென்றார்.. அவர் வாகனத்தை எடுத்துக் கொண்டு சாய்பாபா காலனி பகுதிக்கு வந்திருக்கிறார்.. அன்று இரவு என் வண்டியில் அவர் குடிபோதையில் வந்திருக்கிறார்..

coimbatore traffic vehicle

இதனால் அங்கு வாகன சோதனை செய்தபடி நின்ற போலீசார், அவருக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அபராதம் விதித்தனர். தொடர்ந்து வாகத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கான அபராதத்தை நீதிமன்றத்தில் கட்டிவிட்டு வாகனத்தை எடுத்துக்கொள்ள சொன்னார்கள்.

இதற்காக கடந்த ஆறு மாதமாக அலைந்து வந்தேன்.. ஒருவழியாக அபராதத்தையும் கட்டினேன். அவர்கள் வாகனத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறி ஸ்லிப் தந்தார்கள். அத்துடன் அவர்கள் பார்க்கிங்கில் கட்டணம் எவ்வளவு கட்டணம் சொல்கிறார்களோ, அதையும் கட்டிவிட்டு வாகனத்தை எடுத்துக் கொள்ளுமாறு போலீசார் கூறினார்கள்..

கோர்டில் அபராதம் கட்டி வாகனத்தை எடுக்க 12000 ரூபாய் ஆனது. அதை காவல் நிலையத்தில் காட்டிய போது, பார்க்கிங்கில் வாகனம் இருப்பதாகவும் தெரிவித்தனர். பார்க்கிங்கில் வாகனத்தை விட்டதற்கான ஸ்லிப்பை காட்டிய போது, ஓராண்டு வரை வாகனம் இருந்தது. எனவே 14040 ரூபாய் கட்டுமாறு பார்க்கிங்கில் கூறினார்கள்.. போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தால், அவர்கள் தான் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்ளாமல், அதனை பார்க்கிங்கில் விட்டுவிட்டார்கள்.. இது எந்த விதத்தில் நியாயம்.." என்று கேள்வி எழுப்பினார்.

வண்டியை எடுக்க தாமதம் ஆனது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம், "வண்டியை பறிமுதல் செய்த உடனேயே என்னால் பணத்தை கட்டி வாகனத்தைமீட்க முடியவில்லை.. ஏனெனில் பணத்தை புரட்ட முடியவில்லை.. 3 மாதம் கழித்து போன போது, போலீசார் அடுத்த வாரம் வா, அடுத்த வாரம் வா என்று கூறினார்கள்.. 10, 12 முறை நான் வந்த பிறகு, ஒரு கட்டத்தில் கோர்டில் போய் கட்டி எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள்" இவ்வாறு தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+