கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு
கோவை: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் நடைபெறுகிறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி இடையேயான போட்டியால் கோவை களம் அனல் பறக்கிறது. செந்தில் பாலாஜி கோவை திமுகவை அளிக்க ஸ்கெட்ச் போட்டு வேலை செய்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவையில் பிரச்சாரம் செய்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, "கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் மிக அதிக அளவில் நடந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்குகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

ராகுல் காந்தி தயாராக இல்லை
தமிழ்நாட்டை ஒரு கஞ்சா தலைநகரமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். திமுகவின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் சர்வதேச அளவில் கஞ்சா விற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 'ஆன்டி கஞ்சா டாஸ்க் போர்ஸ்' அமைக்கப்பட்டு, 100 நாட்களுக்குள் மாற்றம் கொண்டு வரப்படும்.
ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஸ்டாலின் கடந்த ஐந்து ஆண்டுகளில் கேரள அரசுக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை. இந்தத் தேர்தலை ஒரு பெரிய மாற்றமாக, சரித்திரப் பதிவாக மாற்ற வேண்டும். ராகுல் காந்தி தமிழகம் வருவதற்கு தயாராக இல்லை. அவருக்கு தேர்தல் முடிவு என்ன என்பது தெரியும்.
திமுக காங்கிரஸ் கூட்டணி
மே 4 ஆம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராவார். திமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை காங்கிரசுக்கு எதிராக தான் நடத்தியது. தமிழகத்திற்கு ஒவ்வொரு பிரச்சனை வரும்போதும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் மாநிலத்தில் திமுக ஆட்சியும் தான் இருந்தது. இவற்றையெல்லாம் பார்த்து தான் மக்கள் காங்கிரஸ் கட்சி வேண்டாம் என்று முடிவுக்கு வந்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டுவதற்கு மட்டும்தான் கோவை வருகிறார். இங்கு திட்டங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டவை. திமுகவை ஒரு இடத்திலும் கூட வர விடக்கூடாது. திமுக கூட்டணியில், அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கே முறையாக தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் திமுக தோற்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார்.
செந்தில் பாலாஜி மீது விமர்சனம்
செந்தில் பாலாஜி கோவை மாவட்ட திமுகவை அழிப்பதற்கு ஸ்கெட்ச் போட்டு வேலை செய்கிறார். செந்தில் பாலாஜி ஒரு விஷக்கிருமி. கரூரில் 251 பட்டிகள் போடப்பட்டது. அதிமுக விஜயபாஸ்கர் இது குறித்து புகார் அளித்து மாவட்ட ஆட்சியர் அந்த பட்டிகளுக்கு பூட்டு போட்டுவிட்டார். கோவை தெற்கு தொகுதியிலும் இதுபோன்று பல்வேறு பகுதிகளில் பட்டி அமைக்கப்படுகிறது.
அங்கு உதயநிதி ஸ்டாலின் படத்தை போடுகிறார்கள். வருகிற 18ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளார். மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து பல்வேறு நிதிகளை கொடுத்துக் கொண்டே தான் இருக்கும். திமுகவினர் பல பகுதிகளில் 8,000 ரூபாய் டோக்கன்களை கொடுத்து வருகிறார்கள். இப்படித்தான் காதில் பூ சுற்றுவார்கள்" என்றார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications