Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை கட்டாயமாகப் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக தலைமை உறுதியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் அல்லது கட்சியில் தேசியளவிலான பெரிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பதவி பறிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் அண்ணாமலைக்கு கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால் அண்ணாமலை மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அப்செட்டில் உள்ளனர்.

bjp-annamalai-condition-annamalai-set-for-the-leadership-to-contest-the-assembly-elections

கோவையில் பாஜகவுக்கு ஒரு தொகுதி

சட்டசபை தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 2024 நாடாளுமன்ற தேர்தலை போலவே இந்தமுறையும் அண்ணாமலை கோவையில் போட்டியிட விரும்பினார். கோவையில் கவுண்டம்பாளையம் அல்லது சிங்காநல்லூர் தொகுதியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோவையில் ஒரு தொகுதி மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை போட்டியிட விரும்பிய தொகுதியை பாஜகவினர் கேட்டு பெறவில்லை. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோவை வடக்கு தொகுதியில், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அதிக வாக்குகள் பெற்றுள்ளார். அதனால் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியை கேட்டார். அங்கு ஏற்கனவே பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதனால் அண்ணாமலைக்கு பாஜக தலைமை உறுதி கொடுக்கவில்லை.

அண்ணாமலை ஆதரவாளர்கள்

அண்ணாமலையும் அவரின் ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியடைந்தனர். கட்சி பணிகளில் இருந்தும் அவர் ஒதுங்கியே இருந்தார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று டெல்லி மேலிடத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய இடங்கள் வெற்றி வாய்ப்பிருக்கக்கூடிய இடங்கள் இல்லை.

ஒரு சில நிர்வாகிகள் தாங்கள் வெற்றி பெறக்கூடிய இடங்களை மட்டும் வாங்கிவிட்டு, தோல்வி அடையக்கூடிய இடங்களைக் வாங்கியிருக்கின்றனர். இந்த தேர்தலில் போட்டியிட்டால் நானும் இதற்கு உடந்தையாக இருந்ததாக தொண்டர்கள் நினைக்கக்கூடும் என்பதால் தான் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கடிதம் அனுப்பியிருந்ததாக சொல்லப்படுகிறது.

தலைமைக்கு கடிதம்

அந்தக் கடிதத்தின் தொடர்ச்சியாக பாஜகவின் தேசிய தலைமை அண்ணாமலையை தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலை போன்ற பெரிய தலைவர் போட்டியிட வேண்டும் என்றும், போட்டியிடாவிட்டால் தமிழகத்தில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்று கூறியதாகவும், இதனால் முக்கிய நிர்வாகிகளே வெற்றி பெறுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் கட்டாயமாகப் போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைமை வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாகத் தான் நேற்று புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலையை உடனடியாக சென்னைக்கு வர வேண்டும் என்று தமிழகம் வந்த பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாஜக வேட்பாளர் தேர்வு பட்டியல் ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அண்ணாமலையிடம் பியூஷ் கோயல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அதில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் முக்கிய கோரிக்கையை வைத்ததாக சொல்லப்படுகிறது.

போட்டியிட்டா வடக்குத் தொகுதி

அப்போது, கோவை வடக்குத் தொகுதியில் தான் போட்டியிட விரும்புவதாக அண்ணாமலை பியூஷ் கோயலிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கோவையில் பாஜகவுக்கு ஒரே ஒரு தொகுதி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவையின் தெற்குத் தொகுதி வானதி சீனிவாசன் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்காக பாஜக கோவை வடக்குத் தொகுதியைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜகவின் மாநில நிர்வாகிகள் ஏற்கனவே ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒருவரைத்தான் பாஜக தலைமை உறுதி செய்யும். அந்த வகையில், மொடக்குறிச்சி தொகுதி ஏற்கனவே பாஜக வெற்றி பெற்ற ஒரு தொகுதியாக உள்ளது. மொடக்குறிச்சி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக பாஜக சரஸ்வதியே உள்ளார். இந்நிலையில், மொடக்குறிச்சி தொகுதிக்கான பெயர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இணைக்கப்பட்டு தலைமைக்கு அனுப்பியுள்ளது.

கோவை வடக்கு யாருக்கு

ஆனால், கொடுத்தால் கோவை வடக்கு தொகுதியில் தான் தனக்கு கொடுக்க வேண்டும். மொடக்குறிச்சி உள்ளிட்ட வேறு எந்த தொகுதியிலும் தன்னால் போட்டியிட முடியாது என அண்ணாமலை கூறியுள்ளார். இந்நிலையில், கோவை வடக்குத் தொகுதி அண்ணாமலைக்கே வழங்கப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கோவை வடக்கில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே வானதி சீனிவாசன் தயாராக இருக்கக்கூடிய நிலையில், கோவை வடக்குத் தொகுதி அண்ணாமலைக்கு ஒதுக்கப்படுமா அல்லது வானதி சீனிவாசனுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது கோவை வடக்குத் தொகுதி யாருக்கு என்பது தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+