தேர்தல் ஆணையர் அருண் கோயல் என்ன எனக்கு மாமாவா? மச்சானா? - அண்ணாமலை ஆவேசம்!
கோவை: தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று திடீரென ராஜினாமா செய்தது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ராஜினாமாவை உடனடியாக குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

தேர்தல் ஆணையர் அருண் கோயல் விலகலுக்குப் பின்னணியில் பாஜகவின் திட்டங்கள் இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. தேர்தல் தோல்வி பயத்தில் பாஜக சதித் திட்டம் தீட்டுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரஸ் மீட்டில் பதில் அளித்துள்ளார்.
எனக்கு மாமனா மச்சானா?: தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “அவர் எனக்கு மாமனா மச்சானா? அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். தெரியாத யூகங்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையர் அருண் கோயல் அதிகாரப்பூர்வமாக ஒரு கருத்து சொல்லி இருந்தால் அதற்கு நான் பதில் சொல்லலாம்.
அவர் விலகியதற்கான காரணம் எதுவுமே சொல்லாதபோது அதைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? அவர் மட்டும் இல்லை. இந்தியாவில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ராஜினாமா செய்கிறார்கள். அவர் இடத்தை வேறொருவர் நிரப்புவார். அருண் கோயலுக்கு நான் மாமனும் இல்லை மச்சானும் இல்லை, இருந்திருந்தால் எனக்கு போன் பண்ணி சொல்லி இருப்பார். சத்தியமா எனக்குத் தெரியாது. நாளை, அதன் பிறகு அவர் ஏதாவது பேசினால் அது குறித்து நான் பதில் சொல்கிறேன்.” என்றார்.
நான் அரசியலுக்கு வந்திருப்பது இதற்காகத்தான்: தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “நான் அரசியலுக்கு வந்திருப்பது மக்கள் பணி செய்வதற்கு, தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு. 2026 முக்கியமான தேர்தல், தமிழகத்தில் சாக்கடையில் சுத்தம் செய்ய வேண்டும். என்னுடைய உழைப்பு முழு நேரம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். பாராளுமன்றத்தில் யார் இருப்பது என்பதை கட்சி முடிவு செய்ய வேண்டும். கோயம்புத்தூரில் வளர்ச்சி குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றைக்கு இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் கிடையாது.
லோக்சபா தேர்தலுக்கு நாங்கள் எப்போதே தயாராகி விட்டோம். தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம், தமிழ்நாட்டில் இது ஒரு சரித்திர தேர்தலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்களும் பத்திரிகையாளர்கள் மீது கோபத்தில் தான் இருக்கின்றோம். கருத்துக்கணிப்புகளில் எங்கள் கட்சி 25 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறுவதை 18 சதவீதம் என்று போடுகிறார்கள்.” எனத் தெரிவித்தார்.
கிணறு தோண்டப்போய் பூதம் வந்த கதை: மேலும் பேசிய அண்ணாமலை, “போதைப் பொருள் ஜாபர் சாதிக் கைது வழக்கில், இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அதை எல்லாம் என்.சி.பி அதிகாரிகள் கண்டுபிடித்து தமிழக மக்கள் முன்னால் நிறுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. கிணறு தோண்ட தோண்ட பூதம் வரும் கதை போல யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை என்.சி.பி செய்ய வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.” என்றார்.
-
அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்.. பூக்களோடு வீசப்பட்டதும் அவர் கொடுத்த ரியாக்ஷன் -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
தேர்தலில் வாக்களிக்க இனி கைரேகை - கருவிழி பயேமெட்ரிக் அடையாளம் கட்டாயம்? உச்சநீதிமன்றம் நோட்டீஸ் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள்












Click it and Unblock the Notifications