கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி" நானும் பாஜகவில் தான் இருக்கிறேன்.. காயத்ரி ரகுராமிற்கு குஷ்பு பதில்!

Google Oneindia Tamil News

கோவை: பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அக்கட்சியில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகினார். இதுகுறித்து பாஜக நிர்வாகி குஷ்பு கூறுகையில், நான் இன்னும் பாஜகவில் தான் இருக்கிறேன், எல்லா பெண்களும் பாஜகவில் இருந்து வெளியில் செல்லவில்லை என்று தெரிவித்தார். அதேபோல் என்னை பற்றி தவறாக திமுகவினர் விமர்சித்த போது அண்ணாமலை ஆர்ப்பாட்டம் செய்தவர் என்றும் குஷ்பு பதிலளித்துள்ளார்.

அண்மை காலமாக பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், அக்கட்சி மீதும் அண்ணாமலை மீதும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ஹனி டிராப் மற்றும் வார் ரூம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தமிழக பாஜகவில் அனலை கிளப்பியுள்ளது. காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எந்த விளக்கமும் இதுவரை கொடுக்காததும் பேசு பொருளாகியுள்ளது.

வயிறு வீங்கிருக்கே? சந்தேகப்பட்டு விசாரித்த டீச்சர்.. 9ம் வகுப்பு மாணவி ஷாக் பதில்.. பெத்த அப்பாவேவா வயிறு வீங்கிருக்கே? சந்தேகப்பட்டு விசாரித்த டீச்சர்.. 9ம் வகுப்பு மாணவி ஷாக் பதில்.. பெத்த அப்பாவேவா

பாஜக பொங்கல் திருவிழா

பாஜக பொங்கல் திருவிழா

இந்த நிலையில் கோவை அடுத்த வெள்ளலூர் நெடுஞ்சாலை அருகே பாஜக சார்பில் "நம்ம ஊர் பொங்கல் திருவிழா" நடைபெற்றது. இதற்கு பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார். இந்த விழாவில் நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டார். இப்பகுதியை சேர்ந்த மக்கள் குஷ்பு உடன் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.

குஷ்பு கும்மியாட்டம்

குஷ்பு கும்மியாட்டம்

தொடர்ந்து வண்ண உடைகளுடன் வெள்ளி கும்மியாட்டம் ஆடிய மக்களோடு குஷ்புவும் சேர்ந்து ஆடினார். இதையடுத்து ரேக்ளா பந்தயத்தை கொடியசைத்து குஷ்பு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்புவிடம் தமிழக அரசின் பொங்கல் பரிசு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழக அரசின் பொங்கல் பரிசு வெட்கக் கேடானது.

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

ஒரு கரும்பு, ஆயிரம் ரூபாய் என்று பிச்சை கொடுப்பது போல் இருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதாக சொல்லும் திராவிட அரசு, இவ்வளவு கேவலமாக நடந்துக் கொள்ளக் கூடாது. சுயமரியாதை ஆட்சி என்று கூறும் திமுக அரசு ஒரு கரும்பு கொடுக்கிறது. இதனை சுயமரியாதையுடன் வாழும் தமிழர்கள் வேண்டாம் என்றே கூறுவார்கள் என்று தெரிவித்தார்.

பாஜகவில் பெண்கள்

பாஜகவில் பெண்கள்

தொடர்ந்து காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒருத்தர் மட்டுமே அப்படி சொல்கிறார். பாஜகவில் இருந்து எல்லோரும் வெளியே செல்லவில்லை. நான் இன்னும் பாஜகவில் தான் இருக்கிறேன். திமுகவினர் என்னைப் பற்றி தவறாக பேசிய போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்று தெரிவித்தார்.

தமிழகம் என்றும் அழைக்கலாம்

தமிழகம் என்றும் அழைக்கலாம்

பின்னர் தமிழ்நாடு விவகாரம் பற்றிய கேள்விக்கு, தமிழகம், தமிழ்நாடு என்றும் அழைக்கலாம். அதில் எந்த தவறுமில்லை. எப்படி அழைத்தாலும் தமிழ்நாடு இந்தியாவின் அங்கம் தான் என்றார். தொடர்ந்து, கமல்ஹாசன் காங்கிரஸ் யாத்திரையில் பங்கேற்றது பற்றிய கேள்விக்கு, கமல்ஹாசன் ஆதரவளிப்பது அவரின் விருப்பம். ஒரு கட்சியின் தலைவராக கமல்ஹாசன் ஆதரவளித்துள்ளார் என்று கூறினார்.

English summary
Actress Gayathri Raghuram quits the BJP saying that there is no protection for women in the party. BJP executive Khushbu said that I am still in BJP and all women have not left BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X