கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவுடன் தொகுதியே முடிவாகவில்லை.. அதற்குள்.. கவுதமி தலைமையில் கோவையில் ஆரவாரமாக "களமிறங்கிய" பாஜக

Google Oneindia Tamil News

கோவை: சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு இறுதி செய்யபடாத நிலையில், கோவையில் பாஜகவினர் ஆரவாரமாக பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர்.

Recommended Video

    கவுதமி தலைமையில் கோவையில் ஆரவாரமாக பிரச்சாரத்தை துவக்கிய பாஜக - வீடியோ

    சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் முனைப்பு காட்டி வருகின்றன.

    அதிமுக பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யபடாத நிலையில், கோவையில் பாஜகவினர் தேர்தல் பரப்புரையை துவக்கி உள்ளனர்.

    சசிகலா- எடப்பாடியார்; மமதா- கங்குலி; நிதிஷ்- சிராக் பாஸ்வான். உள்ளூர் தலைகளை மோதவிடும் பாஜக பாணி சசிகலா- எடப்பாடியார்; மமதா- கங்குலி; நிதிஷ்- சிராக் பாஸ்வான். உள்ளூர் தலைகளை மோதவிடும் பாஜக பாணி

     பாஜக கொடியுடன் பேரணி

    பாஜக கொடியுடன் பேரணி

    கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து சிவானந்த மில்ஸ் வரை 400 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பேரணியாக சென்றனர். பா.ஜ.க கொடி மற்றும் நமது சின்னம் தாமரை ஆகிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.

    கவுதமி தலைமை

    கவுதமி தலைமை

    இந்த பேரணியை பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான கவுதமி துவங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கெளதமி, தேர்தல் பரப்புரையை துவக்கியிருப்பது பொன்னான எதிர்காலத்திற்கான முதற்படி எனத் தெரிவித்தார்.

    கவுதமி பேட்டி

    கவுதமி பேட்டி

    வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு அருமையான வெற்றி கிடைக்கும் எனவும், கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிய நேரம் எடுத்தாலும், விரைவில் முடிவு எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

    பேச்சுவார்த்தை முடியவில்லை

    பேச்சுவார்த்தை முடியவில்லை

    அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது. ஆனால் இன்னும் எத்தனை தொகுதிகள் என்பதே முடிவாகவில்லை. இதற்கிடையில் கோவையில் பாஜக மட்டும் பேரணி நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    With assembly elections coming up on April 6, all parties are pushing for coalition and constituency distribution. With the distribution of seats between the AIADMK and the BJP yet to be finalized, the BJP has launched an election campaign in Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X