வடகோவை டூ பம்பை- பாஜக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி யாத்திரை!
கோவை: பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுட்டி இன்று யாத்திரை புறப்பட்டார்.
ஆடி அமாவாசையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும். இன்று மாலை நடை திறக்கப்படும் நிலையில் நாளை காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வரும் 21-ந் தேதி இரவு 10 மணியுடன் கோவில் நடை சாத்தப்படும்.

இதனையடுத்து ஆடி மாதம் ஐயப்பன் கோவிலுக்கு செல்வோர் மாலை அணிந்து இருமுடி யாத்திரை செல்கின்றனர். கோவையில் பாஜக பெண் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் 10 பேர் கொண்ட குழுவினருடன் சபரிமலை யாத்திரை புறப்பட்டார்.

வடகோவை ஐயப்பன் கோவிலில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்ட 10 பேர் இன்று இருமுடி கட்டி யாத்திரை புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள், பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.

தமது சபரிமலை யாத்திரை குறித்து பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், வடகோவை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டோம். இப்புனித பயணத்தில் ஹிந்துஸ்தான் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் திருமதி.சரஸ்வதி கண்ணையன் அவர்களின் குடும்பத்தாரும், கொங்குநாடு கல்லூரியின் தலைவர் திருமதி.வாசுகி அவர்களும் கலந்துகொண்டனர் என தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம்












Click it and Unblock the Notifications