தனிப்பட்ட தாக்குதலில் நம்பிக்கையில்லை.. ஆனால் எல்லை மீறினால் ’ரியாக்சன்’ வரும்! தடாலடி வானதி சீனிவாசன்
கோவை : மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், தனிப்பட்ட நபர்களின் மீது தாக்குதல் நடத்துவதில் பாஜகவிற்கு நம்பிக்கை இல்லை என என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அதிரடியாகக் கூறியுள்ளார்.
Recommended Video
காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின் போது உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை வந்திருந்தார்.
அவரை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் ஏராளமான பாஜகவினர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவினரை வெளியேற்ற சொன்னதாகக் கூறப்படுகிறது.

கார் மீது தாக்குதல்
இதைத்தொடர்ந்து லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு செல்லும் வழியில் பழனிவேல் தியாகராஜன் காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். அப்போது கார் மீது பாஜக மகளிர் நிர்வாகிகள் காலணியை வீசினர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பழனிவேல் தியாகராஜன், பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்பவில்லை என்றார்.

கண்டனம்
தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று தனது பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது

வானதி சீனிவாசன்
இந்நிலையில் மதுரையில் அமைச்சர் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், தனிப்பட்ட நபர்களின் மீது தாக்குதல் நடத்துவதில் பாஜகவிற்கு நம்பிக்கை இல்லை என என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அதிரடியாகக் கூறியுள்ளார். நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரியாக்சன் வரும்
அதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகளில் கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"தனிப்பட்ட நபர்களின் மீது தாக்குதல் நடத்துவதில் பாஜகவிற்கு நம்பிக்கை இல்லை எனவும், சில சமயங்களில் யார் அந்த எல்லையை மீறுகிறார்களோ , அவர்களுக்கு அதற்குரிய ரியாக்சன் வரும்' என கூறியுள்ளார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
மாரிதாஸ் கைது! திமுக அரசின் பாணியையே தவெகவும் பின்பற்றுகிறதே! வானதி கண்டனம்












Click it and Unblock the Notifications