நேர்ல வந்து கேட்டு பாருங்க! "வானதியும் இங்கே.. வளர்ச்சியும் இங்கே" மநீமவுக்கு வானதி சீனிவாசன் பதிலடி
கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, "வானதி இங்கே.. வாக்குறுதி எங்கே" என ட்ரெண்ட் செய்த நிலையில், "வானதியும் இங்கே வளர்ச்சியும் இங்கே" என பதிலடி கொடுத்து வருகிறார் வானதி சீனிவாசன்.
கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனை குறிவைத்து களமிறங்கியுள்ளது மக்கள் நீதி மய்யம்.

2021 சட்டமன்ற தேர்தலின் போது தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை வானதி சீனிவாசன் நிறைவேற்றவில்லை எனக் கூறி, இன்று உக்கடம் பகுதியில் மநீம சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் தங்கவேலு, மநீம மாநில இளைஞரணி செயலாளர் கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 'வானதிக்கு லாபம்.. மக்களுக்கு நாமம்' என்றும், 'வானதி இங்கே வாக்குறுதி எங்கே' என்றும் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு, மக்கள் நீதி மய்யத்தினர் பதாகைகளை ஏந்தி இருந்தனர். வானதி இங்கே வாக்குறுதி எங்கே என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், "வானதியும் இங்கே வளர்ச்சியும் இங்கே" என்ற தலைப்பில், கோவை தெற்கு தொகுதிக்கான மேம்பாட்டு பணிகளின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல்ஹாசனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களை மென்ஷன் செய்து, "வானதியும் இங்கே வளர்ச்சியும் இங்கே", "கோவை தெற்கு வளர்கிறது", "வானதி இங்கே.. கமல் எங்கே" ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் பதிவிட்டு வருகிறார் வானதி சீனிவாசன்.

மேலும், "கோவை தெற்கு தொகுதியில் 0-2 வதுவரையுள்ள குழந்தைகளின் தாய்மார்களிடம் கேளுங்கள் அவர்கள் சொல்லுவார்கள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்று.
அமுதம் என்னும் மக்கள் நல திட்டத்தினை கடந்த மே 2022ல் துவங்கி அதன் மூலம் இன்று வரை சுமார் 1500கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அதாவது 6 மாதம் வரை தாய்க்கும் அதன் பிறகு குழந்தைக்கும் தினமும் 250 மிலி சுத்தமான பசும்பாலை அவர்களது வீடுகளுக்கே சென்று சேரும் வகையில் தனது தொகுதியில் உள்ள குடும்பங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கான தரவுகளை காணவேண்டுமென்றால் எல்.எல்.ஏ அலுவலகத்திற்கு வாருங்கள்." எனப் பதிவிட்டுள்ளார் வானதி சீனிவாசன்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications