கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க சும்மா தனியா நின்னாலே.. 60 சீட் கிடைக்குமே.. எல். முருகன் பலே பேச்சு!

தமிழகத்தில் பாஜக பலம் கூடியுள்ளது நாங்கள் நடத்திய சர்வே முடிவில் தெரியவந்துள்ளது என்று மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்தில் தனித்து நின்றாலும் ஜெயிக்க கூடியதாக 60 தொகுதிகளை கண்டறிந்துள்ளோம். தமிழகத்தில் பாஜக பலம் கூடியுள்ளது நாங்கள் நடத்திய சர்வே முடிவில் தெரியவந்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

Recommended Video

    தனித்து போட்டியிட்டாலே பாஜக 60 தொகுதியில் வெல்லும் - எல் முருகன்

    தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை சந்திக்க அனைத்து கட்சியினரும் தயாராகி வருகின்றனர். பாஜக முழுவீச்சில் தயாராகி வருகிறது. கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் எல். முருகன், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

    BJP will win in 60 seats alone in Tamil Nadu - L. Murugan

    வருங்காலம் பாஜகவின் காலம். எங்களின் முழு கவனமும் சட்டசபை தேர்தல் மீது உள்ளது அதற்கான பணிகளை நாங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபையில் பாஜக உறுப்பினர்களும் கணிசமான அளவில் இருப்பர்.

    பாரதிய ஜனதா கட்சி கொங்கு மண்டலத்தில் பலம் வாய்ந்ததாக உள்ளது. தமிழகத்தில் தனித்து நின்றாலும் ஜெயிக்க கூடியதாக 60 தொகுதிகளை கண்டறிந்துள்ளோம். தமிழகத்தில் பாஜக பலம் கூடியுள்ளது நாங்கள் நடத்திய சர்வே முடிவில் தெரியவந்துள்ளது என்றார்.

    சசிகலா சொத்து முடக்கத்தில் அரசு அதன் கடமையை செய்கிறது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை என்று கூறினார். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்று கூறியுள்ளார். அவர் கட்சி தொடங்கினால் பாஜக வரவேற்கும் என்று தெரிவித்துள்ளார்.

    2ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர வாய்ப்பிருக்கிறது... பாஜக தலைவர் எல்.முருகன் கணிப்பு 2ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர வாய்ப்பிருக்கிறது... பாஜக தலைவர் எல்.முருகன் கணிப்பு

    கள்ளக்குறிச்சியில் நேற்று பாஜகவின் மாவட்ட கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். இவர்களது ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் தனிமனித இடைவெளி இல்லாமல் ஒன்று கூடியதுடன், ஊர்வலமாகவும் சென்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நோய்த்தொற்று பரவும் விதமாக நடந்துகொண்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் எல்.முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது தியாகதுருகம், கள்ளக்குறிச்சி ஆகிய காவல்நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன முருகன், வழக்கு பதிய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் அனைத்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதும் வழக்கு போட வேண்டும் என்று கூறினார்.

    English summary
    State BJP leader L Murugan has said that the strength of the BJP in Tamil Nadu has increased as per the results of our survey. He also said that he has found 60 constituencies in Tamil Nadu that can be won even if it stands alone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X