கொலுசு கொடுத்து மக்களை ஏமாற்றினார் செந்தில் பாலாஜி! முட்டாள் மாதிரி தெரியுதா! வரிந்து கட்டும் வானதி!
கோவை: மாநகராட்சித் தேர்தலின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களுக்கு கொலுசை கொடுத்து ஏமாற்றிவிட்டதாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிரணியின் தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை மாநகராட்சியில் ஒரு குப்பையை அள்ளச் சொல்வதற்கு கூட எம்.எல்.ஏ. 4 முறை பேச வேண்டியுள்ளதாகவும் அந்தளவுக்கு நிர்வாகம் மோசமாக உள்ளதாகவும் வேதனைத் தெரிவித்தார்.
கோவை மக்களை முட்டாள்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி நினைத்துக் கொண்டாரா என கேள்வி எழுப்பிய அவர், விரைவில் அவருக்கும் பாடம் புகட்டுவார்கள் என வானதி தெரிவித்தார்.

பாஜக எம்.எல்.ஏ.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் குடிநீர் ஏடிஎம் மெஷின்களை மக்கள் பயன்பட்டுக்கு திறந்து வைத்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அமைச்சர் செந்தில்பாலாஜியை வறுத்தெடுத்து விட்டார். கோவைக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள கரூர்காரர் தேர்தலின் போது மக்களுக்கு கொலுசு கொடுத்து ஏமாற்றியவர் என செந்தில்பாலாஜி மீது அட்டாக் செய்தார். கோவை மாநகராட்சியை கண்டித்து பாஜக சார்பில் தனியாக ஒரு போராட்டம் நடத்துவது பற்றி ஒரு மாதமாக டிஸ்கஷன் நடத்தி வருவதாக கூறினார்.

பாடம் புகட்ட தயார்
இதனிடையே மறந்தும் கூட பாஜக போராட்டம் நடத்தும் என அவர் கூறவில்லை. இதற்கு காரணம் ஏற்கனவே கோவையில் பாஜக நிர்வாகிகள் பந்த் அறிவித்து அதனை அண்ணாமலை மறுத்ததால், இந்த முறை போராட்டம் குறித்த விவகாரத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக மட்டும் தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் ஒரு குப்பையை அள்ளச் சொல்வதற்கு கூட எம்.எல்.ஏ. 4 முறை பேச வேண்டியுள்ளதாக வேதனையை பகிர்ந்த அவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவை மக்கள் பாடம் புகட்ட தயாராகிவிட்டார்கள் எனக் கூறினார்.

கோவைக்கு துரோகம்
சாலை விவகாரத்தில் கோவை மக்களுக்கு தமிழக அரசு மிகப் பெரிய துரோகம் செய்து வருவதாகவும் கோவையிலிருந்து அதிகமான வரியை பெறும் அரசு, ஒரு சாலை போடக்கூட யோசனை செய்வதாகவும் வானதி சீனிவாசன் சாடினார். கோவையின் அடிப்படை கட்டமைப்பு மிக மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் இது தான் இன்றைய கோவையின் நிலை எனவும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

உறுதிமொழிகள்
இதனிடையே கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு தாம் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாக வானதி பெருமிதம் தெரிவித்தார். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கார்டு மூலம் நாளொன்றுக்கு 20 லிட்டர் வரை கொடுப்பேன் எனக் கூறியதை இப்போது நிறைவேற்றியுள்ளதாகவும், ஒவ்வொரு பகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைத்து வருவதாகவும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் மொபல் அலுவலகம் அமைத்து மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று குறைகள், கோரிக்கைகளை தீர்த்து வைத்து வருவதாக தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications