200 ரூபாய்க்குள் அனைத்து சேனல்களும் வேண்டும்.. கோவையில் கொந்தளித்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள்
Recommended Video

கோவை: டிராயின் புதிய அறிவிப்பை அமல்படுத்துவதற்கான கால அவகாச நீட்டிப்பை உடனே நடைமுறைப்படுத்தவும் , ரூ.200க்குள் பொதுமக்கள் விரும்பும் சேனல்களை பெரும் வகையில் அறிவிப்பில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தியும் கோவையில் கேபிள் டிவி ஆப்பிரேட்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிராய் எனப்படும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ.153.40 கட்டணத்திற்கு தேர்வு செய்து கண்டுக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
புதிய கட்டணம் மாதம் ரூ.130ம், அதற்கான ஜி.எஸ்.டி.யை சேர்த்து மாதம் ரூ.154 ரூபாய் ஆகிறது. புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100சேனல்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலாகி வருகிறது.
ஏற்கனவே, டிராயின் புதிய கட்டண விதிகளுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த நடைமுறையை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை அந்த உத்தரவு அமலாக்கப்படவில்லை என்றும், இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும் கூறி கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கோவை 100அடி சாலையில் ஆம்னி பேருந்து நிலையம் அருகிலுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவன அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர.
அப்போது, ஜி.எஸ்.டி.யில் விளக்கு அளிக்கப்பட வேண்டும் அல்லது வரியை 18சதவீதத்திலிருந்து 5சதவீதமாக் குறைக்க வேண்டும், தற்போது சாதாரண நடுத்தர குடும்பத்தினர் ரூ.400க்கும் மேல் செலவழித்து சேனல்கள் கண்டுகளிக்கும் நிலை உள்ளதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் ரூ.200க்குள் அனைத்து சேனல்களும் பெரும் வகையில் கட்டண முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications