சீரியஸா வேலுமணி பேசிட்டிருக்கும்போதே.. திடீர்னு கேள்வி கேட்ட பெண்.. ஆடிப்போன பாஜக.. குலுங்கிய கோவை
கோவையில் வேலுமணி கூட்டத்தில் பெண் கேட்ட கேள்வி இணையத்தில் ஷேர் ஆகிறது
கோவை: கோவை குலுங்கணும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை வேலுமணி முன்னெடுத்தபோது, திடீரென பெண்மணி ஒருவர் கேட்ட கேள்வியால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து, அதிமுக சார்பில் நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தபோதே, வேலுமணி முக்கிய பிளான்களில் இறங்கினார்.

குலுங்கணும் கோவை
இதற்கு காரணம், போராட்டம் நடத்தப்படுவது மின்கட்டண உயர்வை எதிர்த்து, அதாவது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர் சொந்த தொகுதியை சேர்ந்தவர்.. எதிரும் புதிருமாக பல வருடங்களாக அரசியல் செய்பவர்கள்.. வேலுமணியும் செந்தில் பாலாஜியும் ஒருவரை ஒருவர் கடுமையான முறையில் எதிர்த்துக் கொண்டும், விமர்சித்து கொண்டும்தான் தங்களுக்கான அரசியலை கொங்குவில் நிலைநாட்டி வருகிறார்கள்.. அப்படி இருக்கும்போது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்பதால், கோவை குலுங்கும் அளவுக்கு தொண்டர்கள் திரள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருந்தாராம்..

சக்ஸஸ் எடப்பாடி
இதற்காக நிர்வாகிகளுடன் கட்சி ஆபீசில் தனி ஆலோசனை கூட்டமே வேலுமணி நடத்தியிருந்தார்.. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் திட்டமிட்டபடியே ஏராளமான அதிமுகவினர் திரண்டு வந்திருந்தனர்.. அப்போது அவர்களிடம் பேசிய வேலுமணி, தொண்டர்கள் விருப்பப்படியும், எதிர்பார்த்தபடியும் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வந்து விட்டார்... எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு இடைக்கால பொதுச்செயலாளராக வந்தது யாருக்கு பயம்? ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் பயம்... எடப்பாடி பழனிசாமி உங்களில் ஒருவர்..

செருப்பு காலால் உதைத்தார்
இந்த திமுக ஆட்சியில் மக்களுக்கு எதாவது செய்திருக்கிறார்களா?.. காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என கோர்ட்டே கேள்வி எழுப்பியுள்ளது. ஓபிஎஸ்ஸுடன் சேர்ந்து, அதிமுக தொண்டர்களின் கோவிலான அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்துள்ளனர்... இதற்கு காரணம் ஸ்டாலின். அதிமுக அலுவலக கதவை செருப்புக் காலால் உதைத்தவர் விபத்தில் உயிரிழந்தேவிட்டார்... அப்படி ஒரு அராஜகத்தை இந்த திமுக செய்து கொண்டிருக்கிறது" என்று காட்டமாக கூறியிருந்தார்.

உச்சிவெயில்
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்மணி ஒருவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. உச்சிவெயில் மண்டையை பிளக்க, பொதுமக்கள் திரண்டிருந்த வேளையில், வேலுமணி மேடையில் மின்கட்டண உயர்வு குறித்து ஆவேசமாக பேசி கொண்டிருக்கிறார்.. அப்போது கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த வயதான பெண்மணி ஒருவர், "ஆமா.. சிலிண்டர் விலை பத்தி ஏன் யாருமே பேசறது இல்லை" என்று சுற்றியிருந்தோரிடம் கேள்வி கேட்டார்.

வாயே திறக்க மாட்டீங்களா
அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், அங்கிருந்த அதிமுகவினர் விழித்தனர்.. மறுபடியும் அந்த பெண் தொடர்ந்தார், "இப்படி கேஸ் விலையை ஏத்திக்கிட்டு போனால், எப்படி வாங்கறது? எப்படி குடும்பம் நடத்துறது? ஏன் யாருமே வாய் திறக்க மாட்டேங்கறீங்க? கேள்வி கேளுங்க" என்று அந்த பெண் சத்தமாக சொல்லி கொண்டே இருந்தார்.. இதனால், கூட்டத்தில் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

ரஷ்யா
அந்த பெண் கேட்ட கேள்விக்கு இணையவாசிகள் பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.. "நல்ல கேள்வி.. ஆனால், இதை அதிமுக கூட்டத்தில் கேட்டு என்ன பலன்? பாஜக கூட்டத்தில் போய் கேட்கணும்.. அப்பக்கூட நமக்கு பதில் வராது.. ரஷ்யாவிடம் குறைந்த விலையில் வாங்கும் கச்சா எண்ணெய் யாருக்கு தாரை வார்க்கப்படுகிறது?" அதையும் சேர்த்து நாம கேட்கணும்.. என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications