இப்படி கூடவா செய்வாங்க.. கோவை பெண் மீது சரமாரி தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோவால் 3 பேர் மீது வழக்கு
கோவை: கோவை உருமாண்டம்பாளையம் பகுதியில் ரம்யா என்ற பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், துடியலுார், உருமாண்டம்பாளையம், சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் ரம்யா(43). இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யும் சுய தொழில் செய்து வருகிறார். உருமாண்டம் பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலைகள் தோண்டப்பட்டு தற்போது மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை சாஸ்திரி நகரை சேர்ந்த கல்லுாரி மாணவர் ஒருவர் அந்த மண் ரோட்டில் வந்துள்ளார். அப்போது, அங்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் ஆட்டோ நின்றுள்ளது. இரண்டு வாகனங்கள் செல்ல இடமில்லாமல் இருந்ததால், கல்லுாரி மாணவர் உதவிக்கு ரம்யாவை அழைத்துள்ளார்.
அப்போது, மண் ரோட்டில் உள்ள வீட்டு உரிமையாளர் செங்காளியப்பன் அங்கு வந்து தனது வீட்டின் 'சிலாப்' மீது வாகனத்தை ஏற்றி செல்லக் கூடாது என கூறி ரம்யாவிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த, செங்காளியப்பனின் மகன் ராஜேஸ் கையில் இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு ரம்யாவை தாக்க வந்தார். அக்கம்பக்கத்தினர் சமாதானப்படுத்தி ரம்யாவை அங்கிருந்து அனுப்பினர். ரம்யா அங்கிருந்து தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது, செங்காளியப்பனின் நண்பரான சுந்தர்ராஜன் அங்கு வந்தார்.
திடீரென அங்கு வந்த சுந்தர்ராஜன் ரம்யாவை எட்டி உதைத்து, கையைப் பிடித்து முறுக்கி தாக்கியுள்ளார். இதில், ரம்யா கீழே விழுந்தவுடன் அருகில் இருந்து ஒரு பெரிய மரக்கட்டையை எடுத்து தாக்க வந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களைத் தடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் ரம்யாவை காலால் எட்டி உதைப்பதும், சரமாரியாக தாக்குவதும் பதிவாகி இருந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து ரம்யா புகார் அளிக்க துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். அங்கு இது பெண்கள் தொடர்பாக பிரச்னை நீங்கள் காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து, அவர் காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார், அங்கிருந்த போலீசார் 'இது போன்ற அடிதடி பிரச்னைகள் எல்லாம் துடியலுார் ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும்' என க்கூறி மீண்டும் துடியலுார் செல்லும் படி திருப்பி அனுப்பினர். காயங்களுடன் சென்ற ரம்யாவை போலீசார் அலைக்கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இன்று காலை ரம்யாவின் புகாரை கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் பெற்றுக்கொண்டு, சுந்தரராஜன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்யாவை தாக்கிய சுந்தர்ராஜன் பாமக நிர்வாகி என்றும் கூறப்படுகிறது.
-
இனி அலுமினிய பாத்திரத்தில் ISI முத்திரை கட்டாயம்! உங்க சமையலறையில் 99.5% இது முக்கியம்: கோவை பிஐஎஸ் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications