"அவங்க பக்கத்துல நாங்க எப்புடி" - ஜாதி பாகுபாட்டால் மறுக்கப்படும் பஸ்.. கோவை ஆட்சியருக்கு நோட்டீஸ்
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அண்ணா நகரில் பட்டியல் சாதியினர் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில், சாதி பாகுபாடு காரணமாக 21 எண் அரசுப் பேருந்து இயக்கப்படாமல் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை செயலர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அண்ணா நகர் பகுதிக்கு 64 டி, S15 A/1C, S3 பி, 21, 21 பி ஆகிய 5 பேருந்துகள் காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு இந்த 5 பேருந்துகளையும் அண்ணா நகர் பகுதிக்கு இயக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து, அண்ணா நகர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, 21 மற்றும் 21B பேருந்துகளைத் தவிர மற்ற 3 பேருந்துகள் அப்பகுதிக்கு இயக்கப்பட்டுள்ளன.

ஆனால், அதுவும் காலை முதல் இரவு வரை முழுமையாக இயக்கப்படாமல் காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். அண்ணாநகரில் இருந்து பேருந்து புறப்படுவதால் பட்டியல் சாதி மக்கள் இருக்கைகளில் அமர்ந்து கொள்கின்றனர்.
அவங்க பக்கத்துல எப்படி
அவர்கள் அமர்ந்திருக்கும்போது, நாங்கள் எப்படி நின்று கொண்டோ, அல்லது அவர்களுடன் சமமாகவோ அமர்ந்து செல்ல முடியும் என்று கூறி சிலர் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், டிஎன்எஸ்டிசி அதிகாரிகள், கெம்பனூரில் இருக்கும் உயர்சாதி பிரிவினரின் பேச்சைக் கேட்டு பேருந்தை இயக்காமல் செயல்படுவதாக புகார் எழுந்தது.
பின்பற்றப்படாத உத்தரவு
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் மாவட்ட ஆட்சியரிடம் அண்ணா நகருக்கு செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் 21 ஆம் எண் பேருந்தை இயக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அதனைப் பின்பற்றவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதற்கு மாறாக போளுவாம்பட்டி செல்லும் 64சி என்ற பேருந்து அண்ணா நகருக்கு இயக்கியும், சாதிய பிரச்சனை இல்லை எனவும் அறிக்கை சமர்பித்து இந்த விவகாரத்தை மூடி மறைத்துள்ளனர். இந்த விவகாரத்தின் பின்புலத்தில் திமுக, அதிமுக அரசியல்வாதிகள் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக இருந்து கொண்டு, முட்டுக்கட்டை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
21 பேருந்தை இயக்க நடவடிக்கை
இதைத்தொடர்ந்து, 21 எண் பேருந்தை இயக்கக் கோரி, அப்பகுதி மக்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடந்த மாதம் புகார் அனுப்பிய நிலையில், தற்போது கோவை மாவட்ட ஆட்சியருக்கும், போக்குவரத்து செயலருக்கும், தேசிய தாழ்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அப்பகுதி மக்களுக்கு பேருந்து இயக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications