செஸ் ஒலிம்பியாட்.. கலக்கும் கோவை.. செஸ் போர்டு வடிவில் ஜொலிக்கும் பஸ் நிறுத்தங்கள்
கோவை : தமிழகத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை மாநகர பகுதிகளில், செஸ் போர்டு போன்று மின்னொளியில் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Recommended Video
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் வரும் 28-ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளன. இந்த பிரமாண்ட போட்டித் தொடரில், சுமார் 188 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர். இதனால் இந்த செஸ் போட்டி தொடரை, தமிழக அரசு முக்கியமான விஷயமாக கருத்தில் கொண்டுள்ளது. இதையொட்டி, இந்த பிரமாண்ட விளையாட்டுத் தொடர் குறித்து, தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த விழா நிகழ்ச்சிக்களுக்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு அரசு சார்பில் 18 குழுக்கள் மும்முரமாக கவனித்து வருகின்றன. இதன் வெளிப்பாடாக, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் செஸ் போட்டிக்கான விளம்பர காட்சி, தமிழக அரசின் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த விளம்பர காட்சியில், சதுரங்க பலகையை போன்று மாற்றப்பட்ட நேப்பியர் பாலத்தையும் காணமுடியும். நேப்பியர் பாலம் தற்போது செஸ் போர்ட் போல் கருப்பு, வண்ண நிறத்தால் வர்ணம் தீட்டப்பட்டு கூடுதல் அழகோடு மிளிர்கிறது. இதனை பார்க்க தினந்தோறும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். உற்சாகமாக இந்த பாலத்தோடு இணைந்து, புகைப்படமும் எடுத்தும் மகிழ்கின்றனர்.
இதேபோல், கோவை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகரில் 10க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் செஸ் போர்டை போன்று மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் இந்த பேருந்து நிறத்தங்கள் ஜொலிப்பது, பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வரகிறது. பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள், இதனை பார்த்து ஆர்முடன் செல்பி எடுத்து உற்சாகமடைகின்றனர். முதல்கட்டமாக லட்சுமி மில்ஸ் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தம் வண்ணமயமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து பேருந்து நிறுத்தங்கள் மின்னொளியால் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications