அவிநாசி மேம்பாலம் அக்.9 இல் திறப்பு.. கோவையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
கோவை: கோவை மக்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த அவினாசி சாலை புதிய மேம்பாலம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதியன்று திறக்கப்படவுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, கோவையில் பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல், போக்குவரத்துப் பிரிவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்க கோவை மாநகருக்கு வர இருப்பதால் 09.10.2025 ஆம் தேதியன்று சூழ்நிலைக்கேற்ப கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

1). நீலாம்பூர் பைபாஸ் வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள்
(i) பேருந்து மற்றும் கன ரக வாகனங்கள்
நீலாம்பூர் ஏர்போர்ட் வழியாக சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் ஆம்னி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து நகருக்குள் வருவதற்கு தடை செய்யப்படுகிறது. மாறாக நீலாம்பூரிலிருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், இராமநாதபுரம் சுங்கம் வந்து வலதுபுறம் திரும்பி KR ரோடு, அவினாசி சாலை, அண்ண சிலை வழியாக காந்திபுரம் வந்தடையலாம்.
(ii) இலகுரக வாகனங்கள்
நீலாம்பூரில் இருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவில் வலது புறம் திரும்பி தொட்டிபாளையம், காளப்பட்டி நால்ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.
2). நகருக்குள் இருந்து ஏர்போர்ட் வழியாக அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள்
(i) பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள்
காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அவினாசி ரோடு, ஏர்போர்ட் வழியாக நகருக்கு வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் லட்சுமி மில்லில் U-Tum செய்து புளியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர், L&T பைபாஸ் வழியாக வெளியே செல்லலாம். அதே போன்று காந்திபுரத்திலிருந்து சத்தி சாலை வழியாக கணபதி, வாட்டர் டேங்க், விளாங்குறிச்சி, காளப்பட்டி நால் ரோடு வழியாக L&T பையாஸ் சென்று அடையலாம்.
(ii) இலரகு வாகனங்கள் மற்றும் நகர பேருந்துகள்
நகருக்குள் இருந்து அவினாசி ரோடு, ஏர்போர்ட் வழியாக செல்லும் இலரகு வாகனங்கள் மற்றும் நகர பேருந்துகள் டைட்டல் பார்க் வரை சென்று U-Turn செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டும்.
விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், காந்தி மாநகர், கொடிசியா வழியாக செல்லும் கனரக வாகனங்கள் கொடிசியா வழியாக செல்வதற்கு தடை செய்யப்படுகிறது. அதற்கு மாறாக காளப்பட்டி நால் ரோடு, தென்னம்பாளையம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தண்ணீர் பந்தலில் இருந்து கொடிசியா வழியாக செல்லும் இலரகு வாகனங்கள் காந்தி மாநகர், பயனியர் மில் வழியாக அவினாசி ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
(i) உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம், சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் அனைத்தும் குறிச்சி பிரிவில் இடது புறம் திரும்பி போத்தனூர் கடை வீதி, இரவில் கல்யாண மண்டபம், செட்டிபாளையம் ரோடு வழியாக ஈச்சனாரி அடைந்து சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.
(ii) பொள்ளாச்சி சாலை வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் கற்பகம் காலேஜ் சந்திப்பிலிருந்து மேம்பாலத்தின் மேல் வராமல் சர்வீஸ் சாலையில் வந்து ஈச்சனாரி கோயில் முன்பு U Turn செய்து, செட்டிபாளையம் ரோடு, இரயில் கல்யாண மண்டபம், போத்தனூர், நஞ்சுண்டாபுரம் ரோடு, இராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம்.
(iii) மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் பிள்ளையார்புரம் செக் போஸ்ட், சுகுனாபுரம் வழியாக கோவைப்புதூர் பிரிவு, குனியமுத்தூர், புட்டு விக்கி வழியாக நகருக்குள் வரலாம்.
(iv) மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் மாச்சாம்பாளையம் பிரிவிலிருந்து இடது புறம் திரும்பி ஞானபுரம், பாலக்காடு ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
எனவே, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து தங்களது பயண வழிகளை மாற்றியமைத்து எளிதாகவும் விரைவாகவும் செல்ல கோவை மாநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications