கொரோனாவில் சிக்கித் தவிக்கும் கோவை.. மு.க.ஸ்டாலின் நேரில் விரைகிறார்.. அதிரடி திட்டங்கள்!
கோவையில் நேரில் ஆய்வு செய்ய உள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்
கோவை: தமிழகத்தில் தொற்று பாதிப்பு, இப்போதைக்கு 6 மாவட்டங்களில் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இது குறித்து ஆலோசிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் அதாவது 30ம்தேதி கோவைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்... அங்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மாவட்ட கலெக்டர் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்..!
கடந்த 2 நாட்களாகவே, சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு கொரோனா தொற்று பரவலில் கோவை முதலிடத்தில் வந்து உட்கார்ந்துள்ளது.. தினசரி தொற்று பாதிப்பு மட்டும் 4 ஆயிரத்தை கடந்து கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலைமைக்கு பல்வேறு காரணங்களும் சொல்லப்பட்டு வருகின்றன.. 2வது அலை ஆரம்பித்தபோதே, சென்னைக்கு அடுத்தபடியாக தொற்று பாதிப்பில் கோவைதான் இருந்தது.. ஆனாலும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அப்போதைய அதிமுக அரசு எடுக்கவில்லை என்கிறார்கள்.. ஒருவேளை அப்போதே தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்தளவுக்கு பாதிப்பு சென்றிருக்காது என்கிறது ஒரு தரப்பு.

வேகம்
மற்றொரு பக்கம், மக்கள் அடர்த்தியும், போதிய விழிப்புணர்வு இல்லாததும்தான் இந்த பரவல் அதிகரிக்க காரணம் என்கிறார்கள்.. மேலும், கொரோனா டெஸ்ட் எடுத்து அனுப்பினால், அந்த ரிசல்ட் வருவதற்கு காலதாமதம் ஆவதால், அதற்குள் தொற்று இன்னும் வேகம் எடுத்து விடுகிறது என்றும் இன்னொரு காரணம் சொல்கிறார்கள்.

தொற்று பாதிப்பு
திமுக ஆட்சி வந்தஉடனேயே, பொது முடக்க விதிமுறைகளை அமல்படுத்தி இருந்தாலும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, நோய் பரவலை தடுத்திருக்க முடியும் என்று மற்றொரு சாரார் சொல்கிறார்கள்.. இதைதவிர, தடுப்பூசி போதுமான அளவு வழங்கப்படவில்லை.. சிகிச்சை செய்யும் டாக்டர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்ற பரவலான புகார்களும் நிலவி வருகின்றன.

டீம் அனுப்புங்க
விளைவு.. மாவட்டமே கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது.. நேற்றுகூட, பாஜகவின் வானதி சீனிவாசன் "கோவையை ஏதாவது செய்து காப்பாற்றுங்க, டீம் அனுப்புங்க" என்று மத்திய அரசுக்கு லெட்டர் எழுதியிருந்தார்.. அதேபோல, கோவை மாவட்டம் மிகப்பெரிய தலைவலியாக மாநில அரசுக்கு உருவெடுத்துள்ளது.. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்புகிறவர்களைவிடவும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், மாநில அரசுக்கு கோவை மாவட்டம் தற்போது பெரும் சவாலாகவும் உருவெடுத்துள்ளது.

குழு
சென்னையில் பாடுபட்டு கொரோனா கேஸ்களை குறைத்து வரும் நிலையில், கோவை கேஸ்கள் மிரட்டி கொண்டிருக்கின்றன.. அதனால்தான் நேற்றே, கோவை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த, முக்கிய அதிகாரிகளின் குழுவை கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

செல்வாக்கு
ஏற்கனவே கொங்குவில் செல்வாக்கை இழந்த திமுகவுக்கு, எம்எல்ஏக்களும் யாரும் இல்லை.. அதனால்தான், இப்படி ஒரு உத்தரவை ஸ்டாலின் பிறப்பித்திருந்தாலும், தானே நேரடியாக செல்ல முடிவெடுத்துள்ளார். நாளை மறுநாள் முக ஸ்டாலின் கோவை மாவட்டம் சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்த போவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

முதல்வர்
அங்கு, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மாவட்ட கலெக்டர் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்... தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்பு, 2வது முறையாக ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications