கோவைக்கு பெருமை சேர்க்கும் பிரமாண்ட திருவள்ளுவர் சிலை.. முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!
கோவை: கோவையில் தமிழ் எழுத்துகளால் உருவாக்கப்பட்ட 25 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக மாநகராட்சியில் உள்ள 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தபட்டு, குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தபட்டு வருகிறது.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சிக்குளம் ஏரிக்கரை நுழைவாயிலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை 25 அடி உயரமும், 15 அடி அகலமும், 20 அடி நீளமும், 2.5 டன் எடையும் கொண்டது.
திருவள்ளுவரின் 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சிலையின் முன்பு திருவள்ளுவரின் முதல் குறளான 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்ற குறள் பொறிக்கப்பட்டுள்ளது.
கோவையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளிக் காட்சி வாயிலாக வைக்கிறார். மேலும், கோவை மாநகரில் ஆடிஸ் வீதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறிவு சார் நூலகத்தையும், உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் அமைந்துள்ள அனுபவ மையத்தையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநர் - வேல்முருகன் கண்டனம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications