கொங்கில் ஸ்டாலின் போடும் மாஸ்டர்பிளான்! ரெடியாகும் டீம்.. அந்த ஒரு ரிப்போர்ட்! அப்படியே பதறும் பாஜக?

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களுக்காக லோக்சபா தேர்தலில் முக்கியமான திட்டம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வகுத்து வருவதாக பாஜக தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொங்கு மண்டலத்தில் திமுகவின் மிக முக்கியமான அமைச்சராக கருதப்பட்டவர் செந்தில் பாலாஜி. லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலம் முழுக்க திமுக வெல்ல இவர் பெரிய காரணமாக இருந்தார். அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

CM Stalin master plan for Kovai and other Kongu region amid the absence of Minister Senthil Balaji

கரூரில் வரிசையாக அடுத்தடுத்து திமுக ஸ்வீப் செய்ய பெரிய காரணம் இவர்தான். அதேபோல் கோவையில் பொறுப்பு அமைச்சராக இருந்தார். அங்கே திமுகவிற்கு எம்எல்ஏ இல்லை என்றாலும் செந்தில் பாலாஜியின் சிறப்பான பணிகள் காரணமாக திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வென்றது.

அதற்கு செந்தில் பாலாஜியின் கடுமையான பணிகள்தான் காரணம்., கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின்பாக கோயம்புத்தூர் உள்ளிட்ட கொங்கு மண்டலம் முழுக்க திமுக வேகமாக வளர்ந்து உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலம் முழுக்க திமுகதான் வென்றது. இதற்கு செந்தில் பாலாஜியின் வியூகம் மிக முக்கிய காரணம். முக்கியமாக கோயம்புத்தூரில் திமுகவின் வெற்றியை செந்தில் பாலாஜிதான் உறுதி செய்தார். அதன்பின் கூட மொத்தம் 50 ஆயிரம் நிர்வாகிகள் மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தனர். கோவை மாவட்ட திமுகவினர் கூட இதை ஆப்ரேஷன் 50 ஆயிரம் என்று அழைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூட, உங்களை இங்கே கொண்டு வந்த செந்தில் பாலாஜிக்கு பாராட்டுக்கள்.

செந்தில் பாலாஜி உங்களை சிந்தாமல், சிதறாமல் கொண்டு வந்துள்ளார். செந்தில் பாலாஜி ஒரு செயலை செய்தால் அது பாராட்டுக்குரிய செயல்தான். சரியான ஆளைதான் பொறுப்பாளராக போட்டுள்ளீர்கள் என்று என்னை பாராட்டுகிறார்கள். 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைகிறார்கள் என்று செந்தில் பாலாஜி சொன்னதும் வியந்து போனேன்., என்று செந்தில் பாலாஜியை பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில்தான் தற்போது செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மனி லாண்டரி பிரிவில் பிஎம்எல்ஏ வழக்கில் கைதாகி இருப்பதால் அவருக்கு பெயில் கிடைப்பதும் சிரமம் ஆகும். இதன் காரணமாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு பணியாற்ற புதிய டீம் தேவை. ஒருவேளை செந்தில் பாலாஜி வெளியே வர முடியாத பட்சத்தில் இந்த டீமை உருவாக்குவதற்கான தீவிர பணிகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாராம்.

அதன்படி முதலில் கொங்கு மண்டலத்தில் இருந்து ஒரு ரிப்போர்ட் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் செந்தில் பாலாஜி என்ற தனிப்பட்ட நபர் குறி வைக்கப்பட்டதை மக்கள் விரும்பவில்லை. அவரை இந்த அளவிற்கு அலைக்கழித்ததை மக்கள் விரும்பவில்லை.

அரசியலில் தவறு செய்யாதவர்கள் இல்லை.. அவர் தவறுசெய்தாரா இல்லையா என்பது இருக்கட்டும்.. ஆனால் இவர் ஒருவரை மட்டும் இப்படி போட்டு குறி வைத்ததை கொங்கு மக்களே விரும்பவில்லை என்று கூறப்படுகிறதாம். அவர் இருந்த போது பணிகள் வேகமாக நடந்தன, அவர் இல்லாமல் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என்றும் கருதுகிறார்களாம்.

இதையடுத்தே முதல்வர் ஸ்டாலின் ஆட்சி ரீதியாக பணிகளையும், கட்சி ரீதியாக பணிகளையும் செய்ய இரண்டு அமைச்சர்கள் குழுவை கொங்கில் போட முடிவு செய்து உள்ளாராம். செந்தில் பாலாஜியை எதற்காக டார்கெட் செய்தார்களோ.. அது பாஜகவிற்கு கிடைத்துவிட கூடாது. கொங்கில் பாஜக கால் பதிக்கவே கூடாது என்று ஸ்டாலின் சில முக்கியமான மாஸ்டர் பிளானை வரும் காலத்தில் களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+