பிபிஇ கிட்டோடு.. களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. கொரோனா வார்டில் அதிரடி விசிட்.. கோவையில் தீவிர ஆய்வு
கோயம்புத்தூர்: கோவைக்கு கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொள்ள சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி ஆய்வு மேற்கொண்டார்.
Recommended Video
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்து வரும் நிலையில் கோவையில் இன்னும் முழுதாக கொரோனா கட்டுப்படுத்தப்படவில்லை. கோவையில் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தனி டீமை தமிழக அரசு அனுப்பி உள்ளது.
கோவையில் திமுக எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பை திமுக அமைச்சர்கள் 2 பேர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே கோவைக்கு நேரில் சென்று கொரோனா ஆய்வு பணிகளை செய்த முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் கோவை சென்றார்.

ஸ்டாலின்
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்தார். இதற்காக நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் ஈரோடு சென்றார். காலையில் பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி மருத்துவ கல்லூரிக்கு சென்று அங்கு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார்.

ஈரோடு
அங்கு கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தின் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் மருத்துவர்களிடம் பேசினார். இதையடுத்து அங்கிருந்து திருப்பூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கும் ஆலோசனைகளை நடத்தினார். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து கூடுதல் படுக்கைகளை திறந்து வைத்தார்.

திருப்பூர்
அதோடு ஈரோடு, திருப்பூரில் புதிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதன் பின் கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு லாக்டவுன் விதிகளை ஆய்வு செய்தார். கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பிரிவில் நேரடியாக சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

கோவை
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்போடு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு நோயாளிகளிடம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்கள் உடல் எப்படி இருக்கிறது, சிகிச்சை முறை நன்றாக இருக்கிறதா, தேவைகள் நிறைவேற்றப்படுகிறதா என்று முதல்வர் ஸ்டாலின் நோயாளிகளிடம் அன்பாக கேட்டறிந்தார்.

ஆலோசனை
இதையடுத்து கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் தலா 10 இன்னோவா ஆம்புலன்ஸ் வீதம், 50 இன்னோவா ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். கோவையில் கொரோனா கேஸ்கள் இரண்டு நாட்களாக குறைத்தாலும், தமிழகத்திலேயே கோவையில் மட்டும்தான் கொஞ்சம் நிலைமை மோசமாக உள்ளது.

இன்று மீட்டிங்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார். நான்கு மாவட்டங்களில் கொரோனாவை துரிதமாக கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications