அவங்க கேட்டது மசாலா ரோஸ்ட்.. ஆனா கிடைச்சது கரப்பான்பூச்சி தோசை.. கோவையில் பிரபல ஹோட்டலில் அதிர்ச்சி
கோவை: கோவையில் சாய்பாலா காலனி அருகே உள்ள ஒரு பிரபல சைவ ஹோட்டலில் பரிமாறப்பட்ட மசாலா தோசையில் கரப்பான் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளது சாய்பாபா காலனி. இங்கு பிரபல உயர்தர சைவ ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கிருந்துதான் பலர் உணவு வாங்கி செல்வர்.

தங்கள் வீட்டு விசேஷம், பார்ட்டிகள், அலுவலக பார்ட்டிகளுக்கும் உணவுகளை இங்கிருந்து வாங்கி செல்வராம். அந்த அளவுக்கு அந்த ஹோட்டல் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது, விலை அதிகமாக இருந்தாலும் சுவை நன்றாக இருக்கிறதே என்பதால் பலர் இந்த ஹோட்டலில் உணவு சாப்பிடுகிறார்கள்.
காலையில் வாக்கிங் செல்வோர் இந்த ஹோட்டலில் டீ, காபி குடித்துவிட்டு வீடு திரும்புவர். சிலர் இந்த ஹோட்டலிலேயே டிபனையும் முடித்துவிட்டு செல்வார்கள். அந்த வகையில் சாய்பாபா காலனியில் எந்த ஹோட்டலில் உணவு தரமாக இருக்கும் என கேட்டால் பலர் இந்த ஹோட்டலின் பெயரைத்தான் சொல்வார்களாம்.
அப்படிப்பட்ட இந்த ஹோட்டலில் ஒரு செயலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஹோட்டலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வந்தனர். அப்போது அங்கு வந்த தம்பதி தங்களுக்கு மசாலா தோசை வேண்டும் என ஆர்டர் கொடுத்தனர். பசியில் காத்திருந்த அவர்கள் தங்கள் டேபிளை நோக்கி இரு மசாலா தோசை வருவதை கண்டு சாப்பிட தயாராகினர்.
டேபிளில் மசாலா தோசை வைத்தவுடன் அந்த தோசையை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டனர். அப்போது தம்பதியில் ஒருவரது தோசையில் முழுசாக கரப்பான்பூச்சி இருந்ததை கண்டு சப்தமிட்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே ஹோட்டல் நிர்வாகிகள் வந்து என்ன என கேட்ட போது கரப்பான்பூச்சியை காண்பித்தனர்.
மேலும் காசு கொடுத்துதானே சாப்பிடுகிறோம், தரமாக கொடுக்க மாட்டீர்களா, ஹோட்டலா நடத்துறீங்க என தம்பதி, நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த சம்பவம் வீடியோவாக சமூகவலைதளங்களில் பரவியது. இது குறித்து தகவலறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டலுக்கு சென்று ஆய்வு நடத்தினர். மேலும் அந்த மசாலாவின் மாதிரியை சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்கள் கூறுகையில், மசாலாவில் கரப்பான்பூச்சி இருந்திருந்தால் அது இப்படி முழுசாக இருக்காது, குழைந்துவிட்டிருக்கும். அல்லது நசுங்கியிருக்கும். எனவே வெளியிலிருந்து பறந்து வந்திருக்கும் என விளக்கம் கொடுத்தனர். எனினும் இதை கேட்காத அதிகாரிகள் ஹோட்டல் கிச்சனை பூச்சி இல்லாத அளவுக்கு கிளீன் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications