கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2021: 3 கோடி கடன்.. 7 சதவிகிதம் வட்டி - எம்.எஸ்.எம்.இ துறை மீண்டெழுமா?

Google Oneindia Tamil News

கோவை: வங்கி மூலம் தற்போது 3 கோடி வரை collateral free loans கொடுக்கிறோம். இதில் மேலும் 3 கோடி வரை கடன் வழங்க வேண்டும் என்று கோவை கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் நிதி தொடர்பாக மூன்று கோடி வரை கடன் வழங்க வேண்டும். கொரனாவால் பாதிக்கபட்ட நிலையில் இது ஒரு முக்கியமான வித்தியாசமான பட்ஜெட் என எதிர்பார்க்கிறோம்.

codissia president ramesh babu request 3 crore loan union budget 2021

தற்போது தான் தொழில்துறை எழுந்து நிற்கும் நிலையில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வரை ஆர்டர்கள் நல்ல முறையில் கிடைத்த நிலையில், தற்போது மூலப்பொருட்களின் விலையேற்றம் அதிகரித்துள்ளதால், நிதி அதிகளவில் தேவைப்படுகிறது.

அதற்காக மூன்று லட்சம் கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அது போதுமானதாக இல்லை. எனவே மேலும் மூன்று கோடி வரை கடன் வழங்க வேண்டும். அதும் 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைகடன்... விவசாய கடன் தள்ளுபடி... மு.க.ஸ்டாலின் உறுதி..!..! கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைகடன்... விவசாய கடன் தள்ளுபடி... மு.க.ஸ்டாலின் உறுதி..!..!

விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகளவில் வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக எம்.எஸ்.எம்.இ உள்ளது. தொழில் மூலதனம் 20% என்பது போதாது. அதனை 40 சதவிகிதமாக அதிகரித்து தரவேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பட்ஜெட் நாளை (பிப்.1) தாக்கல் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

English summary
codissia president ramesh babu demand 3 crore loan - Reports
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X