கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் வீட்டு உரிமையாளர் ஒருவர் அவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக கோவை மாநகராட்சி அலுவலகத்தை அணுகினார். இதற்கான அனுமதியை உதவி ஆணையர் வழங்கினார். அதன் பிறகு இந்த குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணி மேற்கொள்ள வேண்டிய குடிநீர் இணைப்பு டேப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் பிளம்பர் ஈஸ்வரன் ஆகியோர் 5000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவாகரத்தில் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பொதுவாகவே சில அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் பணிகளை செய்வதற்கு தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அப்படிப்பட்ட அதிகாரிகளை கையும் களவுமாக சிக்க வைக்க பொதுமக்களால் முடியும். வருவாய் துறையில் பட்டா வாங்க, பத்திரப்பதிவு செய்ய, சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, மின் இணைப்பு பெற, குடிநீர் இணைப்பு பெற என புதிய வீடு தொடர்பான சேவைகளை பெற லஞ்சம் கேட்பது ஆங்காங்கே நடக்கிறது. அவர்கள் மீது புகார்களை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புத்துறை கையும் களவுமாக பிடித்து கைது செய்து வருகிறது. கோவையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

Coimbatore A twist given by a government employee to the owner of a new house for water connection

கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் வீட்டு உரிமையாளர் ஒருவர் அவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக கோவை மாநகராட்சி அலுவலகத்தை அணுகினார். இதற்கான அனுமதியை உதவி ஆணையர் வழங்கினார். அதன் பிறகு இந்த குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணியை காந்தி பார்க்கில் வாட்டர் டேங்க் கீழ் பகுதியில் உள்ள மாநகராட்சி குடிநீர் விநியோக அலுவலகத்தில் பணியாற்றும் குடிநீர் இணைப்பு டேப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் பிளம்பர் ஈஸ்வரன் ஆகியோர் மேற்கொண்டனர்.

அப்போது வீட்டிற்கு குடிநீர் குழாய்கள் பொருத்தி இணைப்பு வழங்க 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று கேட்டு உள்ளனர். உடனே வீட்டு உரிமையாளர் வேலையை செய்து கொடுங்கள் அதன் பிறகு பணம் தருகிறேன் என்று கூறி உள்ளார். ஆனால் முதலில் பணம் வேண்டும் என்று கேட்டு உள்ளனர். இதனால் வீட்டு உரிமையாளர் கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து லஞ்சம் கேட்ட ஊழியர்களை போலீசார் மடக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டரகள் முருகேசன் பிரபுதாஸ் மற்றும் போலீசார் காந்தி பார்க் வாட்டர் டேங்க் அருகில் மறைந்து நின்றனர்.அப்போது வீட்டு உரிமையாளர் டேப் இன்ஸ்பெக்டர் மோகனை சந்தித்தார். அப்போது அவர்கள் கேட்ட லஞ்சப் பணம் 5 ஆயிரத்தை வீட்டு உரிமையாளர் மோகனிடம் கொடுத்து உள்ளார்.

அதை பிளம்பர் ஈஸ்வரனிடம் கொடுக்கும்படி மோகன் கூறி உள்ளார்.அதன்படி வீட்டு உரிமையாளர் பிளம்பர் ஈஸ்வரனிடம் ரசாயன பொடி தடவிய 5 ஆயிரம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த போலீசார் பிளம்பர் ஈஸ்வரன் மற்றும் டேப் -இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோரை மடக்கி கைது செய்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+