இனி கோவைதான்.. தமிழ்நாட்டின் 2வது முக்கிய மெட்ரோவாக உருவெடுக்கிறது? ஒரே நாளில் நடந்த அதிசயம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோயம்புத்தூரை நோக்கி முதலீடுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. முக்கியமாக சென்னையில் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்படும் நிலையில்.. இன்னொரு பக்கம்.. ஐடி நிறுவனங்கள் சென்னையை நோக்கி செல்ல தொடங்கி உள்ளன.

நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. முக்கியமாக தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. உதாரணமாக HP Inc. மற்றும் Dixon Technologies' Padget Electronics ஆகிய நிறுவனங்கள் இணைந்து தமிழ்நாட்டில் HP மடிக்கணினிகள், பர்சனல் கணினிகள் உள்ளிட்ட சிஸ்டம்களை தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இதற்கான தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் HP வகை லேப்டாப்கள் முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும்.

coimbatore

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிவிப்பில்,, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த லேப்டாப் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக அமைக்கப்படும் உற்பத்தி தொழிற்சாலையில், சுமார் 1,500 பேர் பணிக்கு சேர்க்கப்படுவார்கள், என்று அறிவித்துள்ளார்.

அதேபோல் ஆப்பிள் சப்ளையர் ஜபில் திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையை ரூ.2,000 கோடி செலவில் நிறுவ உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 5,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக மாநில அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ஐடி நிறுவனங்கள்: இப்படி மற்ற நகரங்களில் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் நிலையில்தான் கோவையில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோவை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டின் ஐடி தலைநகர் ஆகி வருகிறது.

நல்ல கிளைமேட், நல்ல தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருப்பதால் கோவை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டின் ஐடி தலைநகர் ஆகி வருகிறது. அந்த வகையில் கோவையில் மேற்கொள்ளப்படும் ஐடி முதலீடுகள் தொடர்பான முக்கியமான 3 அறிவிப்புகள் நேற்று வெளியாகின.

சம்பவம் 1: அதன்படி ஆம்பர் குழுமம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் நிறுவனம் கோவையில் புதிய அலுவலகத்தை விரைவில் திறக்கவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அங்கே நடக்க உள்ளது. 15 மாடி கட்டிடமாக அங்கே இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.

சம்பவம் 2: மேலும் கோயம்புத்தூரில் உள்ள Wynfra சைபர்சிட்டி அமைக்கப்பட உள்ளது. ~1.92 மில்லியன் சதுர அடி கொண்ட ஐடி பார்க் இதன் மூலம் அங்கே அமைக்கப்படும். நகரின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப திட்டங்களில் ஒன்றாக இது அமையும்.

தற்போது கோவையில் இருக்கும் ஐடி பார்க்குகளை விட பெரிதாக.. மிகப்பெரிய அளவில் இந்த ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பிரம்மாண்ட வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது. கோவையின் மிகப்பெரிய ஐடி பார்க்காக மட்டுமன்றி.. அதிக சர்வீசுகளை மேற்கொள்ளும் ஐடி பார்க்காக இது உருவெடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஏற்கனவே கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. தனியார் மூலம் பீனிக்ஸ் மால் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படி கோவையில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும் நிலையில் கோவை விரைவில் ஹைதராபாத், பெங்களூரை முந்தினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+