குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா.. ஒரு ஓட்டு வாங்கிய பாஜக பிரமுகர் சொல்வது என்ன?
கோவை: 4வது வார்டில் தான் என் குடும்பத்திற்கு வாக்கு உள்ளது, நான் போட்டியிட்ட வார்டில் இல்லை. தேர்தலில் பணநாயகம் வென்றது என ஒரு ஓட்டு வாங்கிய குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே ஒரே ஒரு ஒட்டு மட்டுமே பெற்றதால் நெட்டிசன்கள் இவரை வைத்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.
Recommended Video
கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளது. பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
திமுகவின் அருள்ராஜ், அதிமுகவின் வைத்தியலிங்கம், தேமுதிகவின் ரவிக்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். பாஜகவின் கார்த்திக் சுயேட்சையாக போட்டியிட்டார்

எத்தனை வாக்குகள்
அங்கு மொத்தம் 1,551 வாக்குகள் உள்ள நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அருள்ராஜே முன்னிலை வகித்து வந்தார். அருள்ராஜ் 387 வாக்குகள் பெற, அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றார்.

பாஜக ஒரு வாக்கு
இதையடுத்து, திமுக வேட்பாளர் அருள்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும். சுயேட்சையாக போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் 1 வாக்கையும் பெற்றுள்ளனர். கார்த்திக் பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார்.

வாக்களிக்கவில்லை
ஒரே ஒரு வாக்கு வாங்கி பாஜக நிர்வாகி தோல்வி அடைநத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. வேட்பு மனு தாக்கலுக்கு பரிந்துரை செய்தவர்கள், பிரச்சாரம் செய்தவர்கள் கூட வாக்களிக்கவில்லை என்பது பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

வாக்கு இல்லை
இதனிடைய பாஜக நிர்வாகி கார்த்திக் குடும்பத்தில் 5 பேர் உள்ள நிலையில் அவர்கள் கூட ஓட்டுப்போடவில்லை என்று திமுகவினர் கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனால் இதற்கு பதில் அளித்துள்ள கார்த்தி, 4வது வார்டில் தான் என் குடும்பத்திற்கு வாக்கு உள்ளது. நான் போட்டியிட்ட 9வது வார்டில் என் குடும்பத்திற்கு வாக்கு இல்லை. தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெறவில்லை. பணநாயகம் வென்றது என்று கூறியுள்ளார்.

ஒத்த ஓட்டு பாஜக
இதனிடையே பாஜக நிர்வாகி கார்த்திக்கை வைத்து வரும் மீம்களில் உள்ள குடும்பத்தனிரே வாக்களிக்கவில்லை என்ற விஷயம் உண்மை இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனிடையே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கி பாஜக நிர்வாகி படுதோல்வி அடைந்ததை கொண்டாடும் திமுகமற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 'ஒத்த ஓட்டு பாஜக' என்று ஹேஷ்டேக் போட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். ட்விட்டரில் அது டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications