1998-ல் 58 பேர் பலியான கோவை குண்டு வெடிப்பு வழக்கின் முதல் குற்றவாளி 'அல் உம்மா' பாட்ஷா காலமானார்!
கோவை: 1998 கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அல் உம்மா தலைவர் பாஷா இதற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் சுமார் 30 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், கடந்தாண்டு பரோலில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்று மாலை உயிரிழந்தார்.
1998 ஆம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்திருந்தது. கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரச்சாரம் செய்வதற்காக அத்வானி பிப்ரவரி 14ம் தேதி கோவை வர திட்டமிடப்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் கோவை மாநகரின் 12 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 56 பேர் உடல் சிதிறி உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

1997 ஆம் ஆண்டு செல்வராஜ் என்ற காவலர் கொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக கோவையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கலவரம் குண்டு வெடிப்பாக மாறியது. இந்த கோர சம்பவத்துக்கு அல் உம்மா அமைப்பு பொறுப்பேற்றது. இந்த வழக்கில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவற்றில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அல் உம்மா இயக்கம் தலைவர் எஸ்.ஏ. பாஷா முக்கிய குற்றவாளியாக இருந்தார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு அவ்வபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக காரணமாக கடந்தாண்டு அக்டோபர் 19 மாதம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாஷா பிணையில் வெளியில் வந்தார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு பாஷா கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்திருந்தார். ஆனாலும் அவர் உடல்நலம் சீராகவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக பாஷா அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. செயற்கை கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் பலனின்றி இன்று மாலை பாஷா உயிரிழந்தார். அவருக்கு வயது 84. பாஷாவின் உடல் உக்கடம் பகுதியில் உள்ள அவரின் மகன் சித்திக் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் மசூதியில் நாளை மாலை அவரின் உடலை நல்லடக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி கோவை மாநகரில் நாளை சுமார் 2,000 காவல்துறையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக விடுப்பில் சென்ற காவல்துறையினரையும் நாளை பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications