கோவை அருகே அசிங்கம்.. மேட்டுப்பாளையத்தில் தனியாக இருந்த கல்லூரி மாணவி.. எல்லை மீறிய அண்ணன்
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த தீபாவளி பண்டிகையன்று அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது அண்ணனே, சொந்த தங்கை என்றும் பாராமல் மிரட்டி அத்துமீறியுள்ளார். இந்த விவகாரத்தில் அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சொந்த அண்ணனே, சொந்த தம்பியே, சொந்த சித்தப்பாவே, சொந்த மாமாவே, ஏன் சொந்த அப்பாவே.. இப்படி நெருங்கிய சொந்த பந்தங்களால் கூட பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது நடக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் அவ்வப்போது இந்த கேவலங்களை கேள்விப்பட்டிருப்போம். அப்படியான ஒரு கேவலமான காரியம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த தீபாவளி பண்டிகையன்று அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 20 வயதான அவருடைய சொந்த அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கிறார். அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவருடைய அண்ணன், தனது உடன் பிறந்த தங்கை என்றும் பாராமல் அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார்.
அதற்கு அவர் அனுமதிக்காததால் அவரை மிரட்டி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அத்துடன் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி துன்புறுத்தினாராம். உடனே அந்த மாணவி, அவரை எதிர்த்து தாக்க முயன்றபோது, தனது கையில் இருந்த பிளேடை எடுத்துக்கொண்டு, தன்னை தாக்கினால், பிளேடை எடுத்து தனது கையில் வெட்டிவிடுவேன் என்றும் மிரட்டினாராம்.
இதனிடையே பிளேடு பட்டு அவருடைய வயிற்றில் பட்டு ரத்தம் வெளியேறியது. உடனே அந்த மாணவி இது குறித்து தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து வயிற்றில் காயம் ஏற்பட்ட அந்த மாணவியின் அண்ணனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தனது அண்ணனே தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக பெற்றோரிடம் கூறி அழுதார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது குறித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியின் அண்ணனை கைது செய்தனர். உடன் பிறந்த அண்ணனே தனது தங்கையை பலாத்காரம் செய்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications