4 மாதங்களில் தீர்ப்பு.. கோவை பாலியல் வழக்கு! மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு.. தீர்ப்பு முழு விவரம்
கோவை: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சமும், அவரது ஆண் நண்பருக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தன் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் திடீரென ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி விட்டு கல்லூரி மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இடட்திற்கு கடத்தி சென்றனர்.

கோவை கல்லூரி மாணவிக்கு கொடூரம்
பின்னர் அவர்கள் 3 பேரும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி(வயது30), கார்த்தி என்ற காளீஸ்வரன்(21) இவர்களது உறவினரான மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்ற தவசி(20) ஆகிய 3 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வந்தது. 50 பக்கத்தில் முதல் குற்றப்பத்திரிகையும், 220 பக்கங்களில் கூடுதல் குற்றப்பத்திரிகையும் என 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. 72 சாட்சிகளிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டது.
மொத்தம் 113 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று சாட்சி பதிவுகள் முடிவடைந்தது. கடந்த 27 ஆம் தேதியுடன் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு அளித்தார். பின்னர் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
இதில் குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சம்பவம் நடைபெற்று 126 வது நாளில் இந்த வழக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரசு வழக்கறிஞர் பி.ஜிஷா, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டதாகவும் கூறினார்.
வழக்கறிஞர் பி.ஜிஷா கூறியதாவது:- 3 பேரும் குற்றவாளிகள் என்று சொல்லி, அவர்கள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இந்த வழக்கு வேகமாக நடத்தப்பட வேண்டும் என ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதன்படி போலீசாரும் விசாரணையை துரிதப்படுத்தினர்.
சம்பவம் நடந்த 126வது நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. நாளைக்கு பெண்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் இன்று இந்த தீர்ப்பு வந்திருக்கிறது. அரசு தரப்பில் 72 சாட்சிகளிடம் நேரடி விசாரணை செய்யப்பட்டது. புதிய பிஎன்.எஸ். சட்டத்தின் படி 70(1) -இன் படி இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டு இருக்கிறது.
கல்லூரி மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும், அவரது ஆண் நண்பருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டது. சிறுநீர் கழிக்கவே அந்த மாணவி அங்கு சென்று இருக்கிறார். சென்ற சிறிது நேரத்திலேயே குற்றவாளிகள் 3 பேரும் அங்கு சென்று ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை தூக்கி சென்று இப்படி செய்திருக்கிறார்கள். என்று கூறினார்.
-
கோவையில் கியாஸ் சிலிண்டர் அடாவடி: மத்திய அரசு விதியை மீறி 36 நாட்களாக உயர்வு.. இல்லத்தரசிகள் ஷாக் -
கோவையின் இதயப் பகுதியில் ஏற்பட போகும் மாற்றம்.. செந்தில் பாலாஜி ஷார்ப் திட்டம் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன்












Click it and Unblock the Notifications