கோவை நொய்யல் ஆற்றில் தவறி விழுந்து காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழப்பு.. என்ன நடந்தது?
கோவை: கோவை மாநகராட்சி 56 வது வார்டு மாமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி , ஒண்டிப்புதூர் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நொய்யல் ஆற்றிற்கு கிருஷ்ணமூர்த்தி போன போது என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கோவை ஒண்டிப்புதூரில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு 62 வயது ஆகிறது. இவர் கோவை மாநகராட்சி 56 வது வார்டு மாமன்ற உறுப்பினரான இருந்து வந்தார். தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி நேற்று (புதன்கிழமை) இரவு 9.30 மணியளவில் ஒண்டிப்புதூருடன் எல் அண்ட் டி பைபாஸ் சாலையை இணைக்கும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இயற்கை உபாதையை கழிப்பதற்காக நொய்யல் பாலம் அருகே தனது வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

பின்னர் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி பாலத்தில் இருந்து இறங்கி பாலத்தின் முனையில் உள்ள ஆற்றங்கரை அருகே சென்றார். ஆனால் இருட்டாக இருந்ததால், அங்கு கொட்டப்பட்டிருந்த உணவு கழிவுகளை மிதித்து, தவறி விழுந்தார். அப்போது ஆற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்ததார். தண்ணீர் வரத்து அதிகமாக இல்லாததால், அவரது உடல் அங்கேயே இருந்தது.
கவுன்சிலர் தவறி விழுந்து இறந்த தகவலை வாகன ஓட்டிகள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து விரைந்து வந்த போலீசார் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அண்மையில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவையில் உள்ள நொய்யல் ஆற்றில் தவறி விழுந்து காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications