ஒரு "நிர்வாகி" செய்ற காரியமா இது?.. அதுவும் மளிகை கடைக்கார பெண்ணிடம்.. திகைத்து போன கோவை காங்கிரஸ்
: செயின் பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்
கோவை: மளிகைக்கடை வைத்திருக்கும் தனலட்சுமியிடம் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளார் ஒரு காங்கிரஸ் பிரமுகர்.. இந்த சம்பவம்தான் கோவையை அதிர வைத்துள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் கேஜிகே சாலையில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்... மனைவி பெயர் தனலட்சுமி.. 55 வயதாகிறது.
மளிகை கடையில் கணவருக்கு உதவியாக தனலட்சுமியும் ஈடுபட்டு வருவது வழக்கம்.. அப்படித்தான், சம்பவத்தன்று தனலட்சுமி மட்டும் கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார்.

மளிகைக்கடை
அப்போது 2 பேர் பைக்கில் வந்துள்ளனர்.. ஒருத்தர் மட்டும் பைக்கில் இருந்து இறங்கி கடைக்கு வந்து, தனலட்சுமியிடம் சிகரெட் கேட்டார்.. தனலட்சுமியும் சிகரெட் எடுத்து அந்த நபரிடம் தந்துள்ளர்.. அப்போது திடீரென, அந்த இளைஞர் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு, தயாராக நின்றிருந்த பைக்கில் ஏறி தப்பிச் சென்றார்.. இதனால் அதிர்ச்சியான தனலட்சுமி, திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார்..

செயின் பறிப்பு
அந்த சத்தம் கேட்டு செல்வகுமாரும், அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்து பைக்கை விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் பைக்கில் பறந்து சென்றுவிட்டனர். இதையடுத்து செல்வகுமார் குனியமுத்தூர் போலீஸில் புகார் அளித்தார்... அந்த புகாரின்போரில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.. இளைஞர் செயினை பறித்து கொண்டு பைக்கில் தப்பி செல்வது பதிவாகியிருந்தது.. மேலும், பைக் நம்பரும் அந்த கேமராவில் பதிவாகி இருந்தது..

கரும்பு கடை
அதனடிப்படையில் தப்பி சென்றவர்களை தேடும் பணி ஆரம்பமானது... இறுதியில் பைக் ஓனரையும் கண்டுபிடித்துவிட்டனர்.. கரும்புக் கடையை சேர்ந்த 17 வயது சிறுவனின் பைக் அது.. இதையடுத்து, சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பைக்கில் வந்த இன்னொருவர் பெயர் பைசல்ரகுமான் என்பது தெரியவந்தது.. அவருக்கு 30 வயதாகிறது.. ஆசாத் நகரை சேர்ந்த அவர், கோவை மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி துணை தலைவர் என்பதும் தெரியவந்தது..

செயின்
இவர்தான் தனலட்சுமியிடம் சிகரெட் கேட்டு, செயினையும் பறித்தவர் என்பது உறுதியானதால், போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்... 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்... வேறு எங்கெல்லாம் இவர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர் என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.. ஒரு காங்கிரஸ் பிரமுகரே அதுவும் முக்கிய பொறுப்பில் உள்ள நபரே, செயின் பறிப்பில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கோவையில் ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications