சொன்னதை செய்த திமுக.. கோவை முக்கிய இடத்தில் அசத்தலான மேம்பாலம்
கோவை: கோவை, மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா கோவில் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை இணைந்து இந்தப் பணிகளை தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டம் முழுவதுமே, கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான பாலங்கள் முறையாக கட்டவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது. அதேபோல போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் மேம்பாலம் கட்டப்படவில்லை என்ற புகாரும் உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு, கோவைக்கு சில முக்கிய திட்டங்களை அறிவித்தது. கோவை விமானநிலைய விரிவாக்கம், செம்மொழி பூங்கா, கலைஞர் நூலகம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில், திருச்சி சாலை சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இதில் முதல்கட்டமாக சாய்பாபா காலனி சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருகம்பெனி சந்திப்பு வரை சுமார் 1 கி.மீ தொலைவுக்கு (975 மீட்டர்), 16.61 மீட்டர் அகலத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
நான்கு வழி போக்குவரத்தை சமாளிக்கும் வகையில் பாலம் கட்ட உள்ளனர். இதற்காக மத்திய நெடுஞ்சாலைத்துறை முதல்கட்டமாக ரூ.75 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த மேம்பாலத்தில் 23 தூண்கள் மற்றும் 22 தளங்கள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "மொத்தம் மூன்று கட்டங்களாக மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக அஸ்திவாரம் தோண்டி, ஆறு தூண்களை கட்ட உள்ளோம். மேம்பால கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் கேசிபி இன்ப்ரா என்ற நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பணிகளை உரிய நேரத்துக்குள், தரத்துடன் முடிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளோம். இந்த மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சாலையில் போதுமான இடம் இருப்பதால். இப்போதைக்கு போக்குவரத்தையும் மாற்றிவிடவில்லை. இருப்பினும் பணிகள் செல்ல செல்ல, காலை மற்றும் மாலை பீக் ஹவர்ஸ்களில் மட்டும் போக்குவரத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்." என்று கூறியுள்ளனர்.
இது கோவை மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சாய்பாபா கோவில் பகுதியை விட மற்ற இரண்டு மேம்பாலம் கட்டுவது அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை மக்கள், “மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்கனவே கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் மேம்பாலங்கள் உள்ளன. சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் தான் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளது. எனவே அங்கு விரைவில் பாலம் கட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கு விளக்கமளித்துள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், “சிங்காநல்லூர் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு ஒப்புதல் கிடைத்து, நிதியும் ஒதுக்கிவிட்டனர். டெண்டர் பணிகள் நடந்து வருகின்றன. அது முடிந்தவுடன் விரைவில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கும். சரவணம்பட்டியில் மேம்பாலம் அமைய உள்ள சத்தி சாலையில் மெட்ரோ ரயில் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்துள்ளோம். அவர்களுடன் ஆலோசித்து பாலம் கட்டுவது தொடர்பான முடிவு எடுக்கப்படும்." என்று கூறியுள்ளனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications