சின்ன பொய்.. கோவையில் கோடியில் புரண்ட தம்பதி.. பூரித்த பூ மார்க்கெட் வியாபாரிகள் புலம்பல்
கோவை: கோவை பூ மார்க்கெட் பகுதியில் பூஜை பொருட்கள் கடை வைத்துள்ள தமிழ்பாண்டியன் மற்றும் அவரது நண்பர்களிடம், வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த அப்பாவு என்ற விஜயகுமார் , அவருடைய மனைவி பிரியதர்ஷினி ஆகியோர் , அதிக லாபம் தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்துள்ளனர் . சதுரங்க வேட்டை பட பாணியில் பல கடைகள் இருப்பதாக பூஜை பொருள் கடைக்காரர்களை ஏமாற்றிய தம்பதி பற்றி பார்ப்போம்.
கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த 33 வயதாகும் தமிழ்பாண்டியன் என்பவர் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். தமிழ்பாண்டியனின் கடைக்கு வீரகேரளம் அருகே உள்ள ஆனந்தா நகரை சேர்ந்த 38 வயதாகும் அப்பாவு என்ற விஜயகுமார் , அவருடைய மனைவி பிரியதர்ஷினி (37) ஆகியோர் அடிக்கடி வந்து பூஜை பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம் ஆகும்.

இதனால் இரண்டு பேருமே தமிழ்பாண்டியனிடம் நன்றாக பழகினார்கள். தினமும் பூஜை பொருட்கள் வாங்கி செல்வதால், அவர்களிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என்று அவர் கேட்டு உள்ளார். அதற்கு விஜயகுமார் நான் பல்வேறு பகுதிகளில் கடைகள் நடத்தி வருவதாகவும், தான் சாமியார் என்றும், தனக்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால் தினமும் கடைகளை திறந்ததும் பூஜை செய்வேன் என்பதால் பூஜை பொருட்கள் அதிகம் வாங்கி செல்வதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக தமிழ்பாண்டியன் அந்த தம்பதியினரிடம் சகஜமாக பழகி இருக்கிறார். கடந்த 2021-ம் ஆண்டு கடைக்கு வந்த விஜயகுமார் பிரியதர்ஷினி தம்பதியினர், தங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதால், அதன் மூலம் தினமும் அதிக வருமானம் கிடைக்கிறது. எனவே நீங்கள் அதில் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் முதலீடு செய்கிறீர்களோ அந்த பணத்துக்கு ஏற்ப லாபம் கொடுக்கிறோம் என்று ஆசைவார்த்தை கூறினார்களாம்.. அதன்படி அவர் ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தாராம்.
அப்போது தம்பதியினர், வங்கியில் கொடுக்கும் லாபத்தைவிட கூடுதலாக கொடுக்கிறோம் என்று கவர்ச்சிகரமாக கூறியுள்ளனர். அதன்படி அவர் முதலீடு செய்த பணத்துக்கு ஆரம்பத்தில் லாபமும் கொடுத்து உள்ளனர். பின்னர் அந்த தம்பதியினர் தமிழ்பாண்டியனிடம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் யாராவது இருந்தால் முதலீடு செய்ய சொல்லுங்கள் என்று ஆசை வார்த்தைகூறியுள்ளனர்.
உடனே தமிழ்பாண்டியன் தனது நண்பர்களான ரஞ்சித், சோமசுந்தரம், சுரேஷ், பொன்னழகு, கண்ணன், பாலசுப்பிரமணி, மருதுபாண்டி, சிவா உள்பட 10 பேரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்களும் அந்த தம்பதியிடம் முதலீடு செய்தனர். அவர்களுக்கும் அந்த தம்பதியினர் ஓரிரு மாதம் மட்டும் லாபத்தொகை கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் கொடுக்கவில்லை.
பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டும், நேரில் சென்று கேட்டபோதும் விரைவில் கொடுத்து விடுவதாக கூறி ஏமாற்றி வந்தாராம். ஆனால் லாபத்தொகையை கொடுக்கவில்லையாம. பின்னர் தமிழ்பாண்டியன் மற்றும் பணம் கொடுத்த அனைவரும் விஜயகுமார்-பிரியதர்ஷினி தம்பதியினரை நேரில் சந்தித்து எங்களுக்கு லாபத்தொகையை கொடுக்க வேண்டாம், நாங்கள் கொடுத்த ரூ.1 கோடியே 2 லட்சத்தை திரும்ப கொடுங்கள் என்று கூறினார்களாம்.
அதற்கு தம்பதியினர் விரைவில் தந்துவிடுவதாக கூறினர். ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்கவில்லை. அப்போதுதான் அவர்கள்தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அறிந்தனர். உடனே அவர்கள் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் விஜயகுமார்-பிரியதர்ஷினி தம்பதியினர் தமிழ்பாண்டியன் உள்பட 11 பேரிடம் ரூ.1 கோடியே 2 லட்சம் வாங்கி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தம்பதியினரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications