அடுத்தடுத்து 3 முறை.. கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கிலும் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்தது

Subscribe to Oneindia Tamil

கோவை: அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் சவுக்கு சங்கருக்கு ஜாமின் கிடைத்த நிலையில், மூன்றாவதாக இன்று கோவை சைபர் குற்றப்பிரிவு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த மே 14ம் தேதி கைது செய்திருந்தார்கள். இதிலும் ஜாமீன் கிடைத்துள்ளது.

தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனி

savukku Shankar coimbatore police

யில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 14ம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரும், சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே கரூரில் பண மோசடி வழக்கிலும் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். கரூர், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவபர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரிடம் 7 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதற்காக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இரண்டு நாள் முன்பு ஜாமீன் கிடைத்தது. இதேபோல் டெல்லியில் உச்ச நீதிமன்றமும் சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் மூன்றாவதாக தற்போது இன்று கோவை சைபர் குற்றப்பிரிவு வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்த நிலையில், அந்த வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் என்ன நிபந்தனை என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.. பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதால் மற்ற வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தால் தான் சவுக்கு சங்கர் வெளியே வர முடியும் என்கிற நிலை உருவாகி உள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உள்ளது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்வு என்பதால் நீதிபதிகள் எஸ்.எம்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விலகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+