தமிழகத்தில் ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா- கோவை ராசாமணி, காஞ்சி பொன்னையாவுக்கு சிகிச்சை
சென்னை: தமிழகத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) இல் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் கே ராசாமணி. இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
தூத்துக்குடி மாநகராட்சி கமிஷ்னர் மற்றும் சிறப்பு அலுவலராக பணியாற்றி உள்ளார். இதேபோல் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவராக பணியாற்றி உள்ளார்.

அதன் பின்னர் கோவை மாவட்ட ஆட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு பின் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
ஆனால் ஜுலையில் இந்த வேகம் கடுமையாக அதிகரித்தது. சென்னை போன்ற பிற பகுதிகளில் இருந்து வந்தவர்களால் கோவையில் கொரோனா கடுமையாக அதிகரித்தது.
இந்நிலையில் முன்கள வீரராக கோவை மாவட்ட ஆட்சி தலைவர் ராசாமணியே களத்தில் இறங்கி கொரோனா தடுப்பு பணி ஆற்றினார். கொரோனா பாதித்த பல இடங்களுக்கு சென்று பணிகளை செய்து வந்தார்.
இதனால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் சோதனை நடத்தப்பட்டது. இதில் கலெடர் ராசாமணிக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதியானது. இதையடுத்து தன்னை தானே கலெக்டர் ராஜாமணி தனிமைப்படுத்திக்கொண்டார். இப்போது அவர் கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா
1இதேபோல் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications