Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெகவினர் ஆபாச பதிவு.. விஜய் மீது புகாரளித்த வைஷ்ணவி.. கேள்விகளால் லாக் செய்த செய்தியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெகவில் ஆக்டிவாக இயங்கி வந்த வைஷ்ணவிக்கு அந்தக் கட்சியில் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று அவர் புகார் கூறி வந்தார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதன் பிறகு சமூகவலைதளங்களில் வைஷ்ணவி தவெக மற்றும் விஜய் குறித்து அதிகளவு விமர்சித்து வருகிறார்.

அதேபோல தவெகவினரும் வைஷ்ணவி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். இதையடுத்து தன் மீது ஆபாச கருத்துகளையும், தன் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து பரப்புவதாகவும் தவெக தொண்டர்கள் மீது வைஷ்ணவி கோவை காவல்துறையில் புகார் அளித்தார். புகாரில் விஜய்யின் பெயரையும் வைஷ்ணவி குறிப்பிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

coimbatore-dmk-cadre-vaishnavi-filed-police-compliant-against-vijay-and-tvk-members

திமுகவில் இணைந்த வைஷ்ணவி

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. இவர் தவெகவில் இணைந்து, சமூகவலைதளங்களில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக ஆக்டிவாக இருந்தார். பிறகு அந்தக் கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்காததால் கடந்த மே மாதம் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் விஜய் மற்றும் தவெகவினர் மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் வைஷ்ணவி புகார் அளித்துள்ளார்.

ஆணையரிடம் புகார்

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் வைஷ்ணவி அளித்துள்ள புகார் மனுவில், "நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியில், அக்கட்சித் தலைவர் விஜய் வழிகாட்டுதலின்படி உறுப்பினராக இணைந்து மக்கள் பணிகளை செய்து வந்தேன். சமூக வலைதளங்களிலும் கொள்கைகளை பரப்பி கட்சியை வளர்த்து வந்தேன்.

மக்கள் நலன்

கடந்த 03.05.2025 தேதி கொள்கை வேறுபாட்டினாலும், மக்கள் பணி செய்வதைத் தடுத்த அக்கட்சி நிர்வாகிகளாலும் தவெகவில் இருந்து நான் விலகினேன். அதன் பிறகு கடந்த 22.05.2025 திமுகவில் இணைந்து மக்கள் பணிகளை செய்து கொண்டு வருகிறேன். மேலும் சமூக வலைதளங்களில் மக்கள் நலன் கருதி என்னுடைய கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன்.

தவெகவினர் அவதூறு

ஆனால் கடந்த மூன்று மாத காலமாக தவெக தொண்டர்கள் என்னை பற்றி மிக அவதூறாகவும், ஆபாசமான வார்த்தைகளாலும் என்னை தரக்குறைவாக பேசி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் என்னுடைய புகைப்படங்களை மிக மோசமாக சித்தரித்து மீம்ஸ் ஆகவும், விடியோவாகவும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இளம்பெண் அரசியல்

இன்றைய கால கட்டத்தில் என்னை போன்ற இளம் பெண்கள் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த இது போன்ற நபர்களால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் பெண்கள் சுதந்திரமாக பொது வாழ்வில் ஈடுபடமுடியாது என்ற அச்சம் தோன்றுகிறது.

விஜய் கண்டிக்கவில்லை

இதை தவெக தலைவர் விஜய் கண்டிப்பார் என்று இத்தனை நாட்கள் பொறுத்திருந்தேன். ஆனால் அதைப் பற்றி எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் இருக்கிறார். இது என்னையும் என்னை போன்று சிறு வயதிலேயே மக்கள் தொண்டாற்ற அரசியலில் பயணிக்கும் பெண்களையும் முடக்கும் ஒரு செயலாக உள்ளது. இது பெண்களை அவமதிக்கும் செயல். எனவே தவெக தலைவர் விஜய் மீதும், தவெக தொண்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

பெண்களைப் பற்றி ஆபாசம்

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைஷ்ணவி, "இளம் பெண்கள் அரசியலுக்கு வருவது இப்போது தான் அதிகமாகியுள்ளது. இப்படியிருக்கும் சூழலில் அவர்கள் பற்றி ஆபாசமான கருத்துகளை பதிவிட்டால் எப்படி அரசியலுக்கு வருவார்கள். பெரியார் பெண்களிடம் கரண்டியை பிடுங்கிக் கொண்டு, புத்தகங்களை கொடுங்கள் என்றார். இவர்கள் மீண்டும் கரண்டியை கொடுக்க பார்க்கின்றனர்.

விஜய் ஊக்குவிக்கிறார்

தவெக தலைவர் விஜய்யும் அதை ஊக்குவிக்கிறார் என்று கருதுகிறேன். "என அவர் சொன்ன போது செய்தியாளர்கள், "விஜய் மீது புகார் அளிப்பது எப்படி லாஜிக்காக இருக்கிறதா. யாருக்கு எதிராகவும் தரைக்குறைவாக பேசக் கூடாது என அறிவுறுத்தியுள்ளாரே." என்று கேள்வி எழுப்பினர். "அவர்களின் விர்சுவல் வாரியர்ஸ்கள் தான் இதை செய்கிறார்கள். இதை அவர் தான் கண்டிக்க வேண்டும்.

கருத்தியல் அரசியல்

அரசியல் களத்தில் நியாயமான கருத்துகளை எடுத்து வைப்படி எப்படி விளம்பரம் தேடுவதாகும். நாங்கள் நாகரிகமான அரசியலை முன் வைக்கிறோம். கருத்தியல் ரீதியான அரசியலை தான் எதிர்கொள்ள வேண்டும். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். மற்றவர்களும் அதையே முன்னிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+