மாணவிகளிடம் ஓவிய ஆசிரியர் செய்த அசிங்கம்.. தட்டித் தூக்கிய போலீஸார்.. கோவையில் கொடூரம்
கோவை: கோவை, பந்தய சாலையில் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓவிய ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை அனைத்து தரப்பினரும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி, பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன. பாதுகாப்பற்ற சமுதாயமாக மாறி வருவதால் பெண் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதற்கே பெற்றோர்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி ஒருவரை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, மணப்பாறையில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பள்ளி தாளாளரின் கணவர், ஆசிரியர் உள்ளிட்டோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். கோவையில் நேற்று 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவங்களில் இருந்து மீண்டு வராத நிலையில், திருப்பூரில் வேலை தேடி வந்த பெண் கணவன், குழந்தைகள் கண் முன்னே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக இளம்பெண், கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.
ஒடிசாவை சேர்ந்த இந்த இளம்பெண் திருப்பூரில் கடந்த சில நாட்களாக தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார். தற்போது வேலை இல்லாத நிலையில் ஊருக்கு செல்வதற்காக திருப்பூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த பீகாரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பனியன் நிறுவனத்தில் வேலை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களும் அந்த இளைஞர்களை நம்பிச் சென்றுள்ளனர். திடீரென பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற மூன்று இளைஞர்களும் கத்தி முனையில் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தொடர் பாலியல் குற்றங்கள் நடந்து வரும் நிலையில், கோவை, பந்தய சாலையில் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓவிய ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மருதமலை அருகே உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். ஓவிய ஆசிரியரான இவர், கோவை பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசுப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருடைய வகுப்பு நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் பயிற்சி அளிக்கும்போது மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும், பள்ளியில் ஓவிய வகுப்பு மற்றும் யோகா வகுப்பு எடுக்கும் போது, மாணவிகளை தவறாக தொட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளியின் முதல்வரிடம் புகார் அளித்தனர்.
மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து அங்கு பயிலும் மாணவிகளிடம் பள்ளி நிர்வாகத்தினர் விசாரானை மேற்கொண்டர். அந்த விசாரணையில், ஓவிய ஆசிரியர் ராஜன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பள்ளி முதல்வர் அளித்த புகாரின் பேரில், ஓவிய ஆசிரியர் ராஜனை காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவ, மாணவிகளை பாலியல் பிரச்சைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், பள்ளி, கல்லூரிகளுக்கு கோவை மாநகர போலீசார் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தினர் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால், பாலியல் பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட மாணவிகள் காவல் துறையில் புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications