300 போலீஸார் அதிரடி ரெய்டு.. கோவையை தலைசுற்ற வைத்த போதை கும்பல்.. ஒரே நாளில் 26 பேர் கைது..
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் புகார் கூறி வருகிறார்கள். கொலை, கொள்ளை, போதை மருந்து பழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். கோவை மாவட்ட காவல்துறையினர் இன்று கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் போதை சாக்லேட்டுகள், கஞ்சா, உயர் ரக போதை வஸ்துக்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 26 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், செட்டிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள். கோவை கல்லூரி, பள்ளிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை மருந்து புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்து வருகிறது. மாணவர்களிடம் கஞ்சா, போதை மாத்திரைகள், உயர் ரக போதை வஸ்துக்கள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் கோவை மாவட்ட காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள் [Coimbatore drug].

ஒரே நாளில் 26 பேர் கைது
இந்த ஆய்வின்போது கஞ்சா உள்ளிட்ட போதை மருந்துகள், செல்போன்கள், உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக காவல்துறையினர் 26 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணக நடத்தி வருகிறார்கள். சோதனையில் பறிமுதல் செய்யபட்ட பொருட்கள் செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதனை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
போலீஸ் சோதனை
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கோவை மாவட்டத்தில் காவல்துறையினர் தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்று காலை பேரூர், கருமத்தம்பட்டி, செட்டிபாளையம் மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்களிடம் போதை மருந்து பயன்பாடு அதிகம் உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மாணவர்கள் தங்கியுள்ள சுமார் 50 இடங்களில் இரண்டு டிஎஸ்பிகள், ஒன்பது இன்ஸ்பெக்டர்கள், 300 காவலர்கள் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர்.
இதில் 22 ஆவணங்கள் இல்லாத வாகனங்கள், 4.5 கிலோ கஞ்சா, 50 மில்லி கிராம் கஞ்சா ஆயில், சிந்தடிக் ட்ரக்ஸ், மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் கல்லூரி மாணவர்கள் ஆவர். மேலும் 18 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். இதில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளது.
போதை பொருட்கள்
வெளி மாவட்டத்திலிருந்து தங்குவதற்கு மாணவர்கள் யாரேனும் வந்தால் வீட்டின் உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோவை மாவட்டத்திற்கு பெரும்பாலும் வெளியில் குற்றம் செய்துவிட்டு இங்கு தங்குகிறார்கள். எனவே வீட்டு உரிமையாளர்கள் வீட்டை வாடகை விடுவதற்கு முன்பு அவர்களை நன்கு விசாரிக்க வேண்டும். சந்தேகப்படும்படியாக இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக தகவல் கூற வேண்டும்.
மாணவர்களுக்கு மெத்தபெட்டமின் எங்கிருந்து வந்தது என விசாரித்து வருகிறோம். போதைப்பொருள் ரயில் மூலம் கோவை வருவதாக தகவல் வந்துள்ளது. கடந்த வருடம் மட்டுமே சுமார் 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எட்டிமடை மற்றும் வாளையார் பகுதிகளில் தலா ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகிறோம்" என்றார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications