திரும்பி வந்துட்டேனு சொல்லு!.. வெள்ளியங்கிரி அடிவாரத்தில் வனத் துறையினரை.. ஓட ஓட விரட்டிய ஒற்றை யானை
கோவை: கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி அடிவாரத்தில் வனத் துறையினரை ஓட ஓட விரட்டிய ஒற்றைக் காட்டு யானையின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. யானையைக் கண்டதும் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. உணவு, குடிநீர் தேடி ஊருக்குள் வரும் யானைகளால் மனித விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அதிகாலை, இரவு நேரங்களில் ஊருக்குள் வரும் யானைகளால் சில நேரம் மனிதர்கள் உயிரிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஊருக்குள் புகும் யானைகள், விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் இரவு நேரங்களில் தொடர் ரோந்துப் பணியில் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், யானைகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கோவை மாவட்டத்தின் எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. மலைக் கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7 ஆவது மலையில் சுயம்புலிங்கமாக சிவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த மலையில் உள்ள சுயம்பு வடிவ லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வெள்ளியங்கிரி பகுதியில் வனப் பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் அவ்வப்போது உணவு தேடி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் வளாகத்தில் முகாமிடுகின்றன. இங்கு பூஜை சாமான் கடைகள், அன்னதான கூடம் போன்றவை உள்ளதால் உணவு தேடி வரும் யானைகள் இவற்றுக்குள் புகுந்து கிடைக்கும் உணவை சாப்பிட்டு செல்வது தொடர்கதையாகி உள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
கடந்த சில மாதங்களாக வெள்ளியங்கிரி, பூண்டி அடிவாரத்தில் உள்ள பழக் கடைகள் மற்றும் அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் உணவு கூடத்தையும் சேதப்படுத்தி அங்கு வைத்திருந்த பொருட்களை தின்று சூறையாடி செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்குள்ள பொருள்களை ருசி கண்ட யானைகள் மீண்டும், மீண்டும் அங்கு வருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், விடுமுறை தினம் என்பதால் வெள்ளியங்கிரி ஆண்டவனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். அப்போது, திடீரென அப்பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. யானையைக் கண்ட பக்தர்கள் அச்சமடைந்து தலைதெறிக்க ஓடினர். இதையடுத்து, அங்கிருந்த வனத் துறை உள்ளிட்ட ஊழியர்கள் யானை உள்ளே வராமல் விரட்ட சென்றனர்.
அப்போது, திடீரென அந்த ஊழியர்களை யானை விரட்டத் தொடங்கியது. இதை சிறிதும் எதிர்பார்க்காத ஊழியர்கள் அப்பகுதியில் இருந்து தலைதெறிக்க தப்பி ஓடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு அங்கிருந்து அந்த யானையை வனத் துறையினர் வனப் பகுதிக்குள் விரட்டினர். யானையை ஊழியர்கள் விரட்டுவதை அங்கிருந்த பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications