கோவை இனி ஜொலி ஜொலிக்கப் போகுது! கூடாரம் போடும் ஐடி நிறுவனங்கள்..தமிழகத்தின் ஏஐ சிலிகான் வேலி இதுதான்!
கோவை: தமிழகத்தின் பொருளாதார வளத்தை அதிகரிப்பதில் கோவை முக்கிய பங்கு வகிக்கிறது. கோவை என்றாலே மோட்டார் தொழில் என்ற நிலை மாறி தற்போது அதிக அளவிலான ஐடி நிறுவனங்கள் கோவையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் இன்னும் சில ஆண்டுகளில் கோவை ஏஐ துறையில் மிகச்சிறந்த வளர்ச்சியை எட்டும் என்கின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள்..
இந்திய அளவில் தமிழகம் எப்படி சிறந்த மாநிலமாக திகழ்கிறதோ அந்த வகையில் தொழில் துறையைப் பொறுத்தவரை கோவை, தமிழக அளவிலும், தேசிய அளவிலும் உலக அளவிலும் புகழ் பெற்ற மாவட்டமாக உள்ளது

பெரிய பெரிய நூற்பாலைகள், தொழிற் சாலைகள், பொறியியல் தொழிற் சாலைகள், கல்லூரிகள், மோட்டார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆன்மீகம், சுற்றுலா என பல்வேறு துறைகளிலும் சிறந்த மாவட்டமாக கோவை விளங்குகிறது.
குறிப்பாக கோவை சூலூர், வெள்ளலூர், பூலாம்பட்டி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பருத்தி உற்பத்தி காரணமாக ஜவுளி உற்பத்தியில் கோவை மிகச் சிறந்த விளங்கியது. அந்த காலத்தில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் ரோமாபுரியின் தங்க காசுகள் கொங்கு நாட்டில் குவிகிறதே என பேசியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் கிரைண்டர் மோட்டார் உள்ளிட்ட தொழில்களிலும், லேத் தொழிலிலும் கோவை சிறந்து வழங்குவதால் இந்தியாவுக்கே தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக இருக்கிறது.
கோவையில் தொடங்கிய ஜவுளி நிறுவனங்கள் தற்போது திருப்பூரில் ஈரோடு வரை பரவியுள்ளது. சுகாதாரம் இயற்கை வளங்கள் நிறைந்த மாவட்டமாகவும் கோவை திகழ்கிறது. இப்படி தொழில் துறையில் சிறந்த மாவட்டமாக இருக்கும் கோவை தொழில் நுட்ப மாவட்டமாகவும் மாற இருக்கிறது. தற்போது உலக அளவில் செயற்கை தொழில்நுட்ப துறையில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.
கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளிலும் வரும் காலங்களில் ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் ஆதிக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை பெங்களூரு, சென்னை ஆகிய தகவல் தொழில்நுட்ப தலைநகரங்களுக்கு பிறகு தற்போது தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பார்வை கோவைக்கு திரும்பி உள்ளது.
உலக அளவில் இந்திய அளவிலும் பிரபலமான நிறுவனங்கள் கோவையை நோக்கி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அதன் காரணமாகத் தான் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற ஐடி உச்சி மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு என்று கோவையில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப வெளி ( covai it valley ) அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
கோவையில் ஒன்றை லட்சத்திற்கும் மேல் சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் இருக்கும் நிலையில் அவற்றில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது. தொழில்களுக்கு மட்டுமல்லாமல் தரவுகள், ஊதியம், சரக்கு மேலாண்மை உள்ளிட்டவற்றுக்காக செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும் டிஜிட்டல் விளம்பரங்கள், சமூக ஊடகங்கள், சைபர் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக செயற்கை நுண்ணறிவு அதிக அளவில் பயன்படுகிறது. தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் கோவைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் கோவையும் அந்தத் துறையில் சிறந்து விளங்கும் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications